நாளைய ராசிபலன் (15-08-2026)
மேஷம்:
இன்று தொடர்ந்து ஒரு சில வேலை அழுத்தத்தால் உடல் சோர்வு உண்டாகலாம். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று காலை முதல் மனதில் குழப்பம் உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். பேச்சுவார்த்தைகளில் கவனம் வேண்டும்.
மிதுனம்:
இன்று வழக்கு ரீதியாக நிறைய குழப்பங்களை சந்திப்பீர்கள் மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
கடகம்:
இன்று உங்களுடன் தொழில் ரீதியாக தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறக்கூடிய காலமாகும்.
சிம்மம்:
இன்று நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். நண்பர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
கன்னி:
மாணவர்கள் அவர்களுடைய முழு திறனை வெளிப்படுத்துவார்கள். உயர் படிப்பிற்கான இருந்து வந்த தடைகள் விலகும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
துலாம்:
இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் ஒரு நல்ல ஏற்றத்தை பெறுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்:
இன்று உடல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது அவசியம். சொந்தங்கள் மத்தியில் கவனம் வேண்டும்.
தனுசு:
இன்று பிள்ளைகளை பற்றிய குழப்பங்கள் விலகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். தாய் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.
மகரம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். சொந்தங்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் எண்ணம் உருவாகும்.
கும்பம்:
விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். இன்று பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.
மீனம்:
குழந்தைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். வழக்கு விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |