நாளைய ராசி பலன்(18-12-2025)
மேஷம்:
உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முகம் தெரியாத நபர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு கிடைக்கும். நன்மையான நாள்.
ரிஷபம்:
காதல் வாழ்க்கையில் உங்களுக்கு சில சிக்கல் வரலாம். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். கவலை விலகும்.
மிதுனம்:
மாணவர்கள் படிப்பில் மந்தமாக இருக்க நேரலாம். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றி சிந்திப்பீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம்.
கடகம்:
வங்கி தொடர்பான விஷயங்களில் சந்தித்த பிரச்சனை விலகும். உடன் பிறந்தவர்களால் சில மன கசப்புகள் சநதிக்கலாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது கவனம் தேவை.
சிம்மம்:
குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் வழி உறவால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் நலனில் முழு அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி:
காதல் வாழ்க்கையில் கவனம் வேண்டும். உங்களை பிரிந்து சென்ற நபர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழம் நாள்.நன்மை உண்டாகும்.
துலாம்:
உடல் ரீதியாக மிகுந்த கவனம் தேவை. சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத மருத்துவ செலவுகள் சந்திக்க நேரலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
தேவை இல்லாமல் பிறரிடம் வீண் வார்த்தை விடாதீர்கள். உங்களுக்கு நெருங்கிய நபர்களிடம் இருந்து முக்கியமான பரிசுகள் கிடைக்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும் நாள்.
தனுசு:
உடல் சோர்வு உண்டாகும். தேவை இல்லாத அலைச்சலால் உங்களுக்கு வெறுப்பு உண்டாகலாம். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்துக் கொள்வார்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்:
உங்களுக்கு சாதகமான நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் யாவும் விலகி நன்மை உண்டாகும். வியாபாரம் விரிவடைவதை பற்றி சிந்திப்பீர்கள். வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
கும்பம்:
உங்கள் வியாபாரம் நல்ல முன்னேற்றம் பெரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்தின் பொழுது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
நீண்ட நாட்களாக வருமானத்தில் இருந்த தடை விலகும். பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும் நாள். நண்பர்கள் துணை இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |