நாளைய ராசி பலன் (18-02-2026)
மேஷம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். சமூக பணிகளில் பங்கு கொள்வீர்கள். மன அழுத்தம் குறையும்.
ரிஷபம்:
மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணை உங்களை புரிந்து நடந்து கொள்ளாமல் போகலாம். வழக்கு விஷயங்களில் நீங்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும் நாள். திருமணம் தொடர்பான பேச்சு நல்ல முடிவை பெரும். வேலையில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.
கடகம்:
பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் வரலாம். மதியம் மேல் உங்கள் மனதில் நல்ல தேல்விக்கு பிறக்கும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும் நாள்.
சிம்மம்:
எதிர்காலம் பற்றிய பயம் விலகும். உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இடம் விற்பனை செய்யவேண்டும் என்று இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும்.
கன்னி:
புதிய வீடு அல்லது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்களுக்கு எதிராக சென்றவர்கள் விலகி செல்வார்கள். உடன் பிறந்தவர்களிடம் கவனமாக பேசுங்கள்.
துலாம்:
மனதில் புதிய சிந்தனை தோன்றும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சிலருக்கு உடல் சோர்வு உண்டாகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
வீடுகளில் எதிர்பாராத குழப்பம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பம் விலகும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாள் கடன் பிரச்சனை நல்ல முடிவை பெறும். சுற்றி உள்ள சொந்தங்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.
மகரம்:
எதையும் தீர ஆலோசித்து செயல்படுவீர்கள். அரசு வழியில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களுக்கு தேவையான விஷயங்களை வாங்கி கொள்வீர்கள்.
கும்பம்:
இன்று வீடுகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணவு பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்:
நீண்ட நாள் இடப் பிரச்சனை நல்ல முடிவை பெரும். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து கவலைகள் விலகும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |