நாளைய ராசிபலன் (25-07-2026)

Report

மேஷம்:

இன்று எதிர்காலம் தொடர்பாக பயம் உண்டாகலாம். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் நாள்.

ரிஷபம்:

இன்று வேலை சார்ந்த முக்கிய பணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். சுபகாரிய செலவுகளை சந்திப்பீர்கள். குழந்தைகளால் உங்களுடைய மதிப்பு உயரும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும்.

மிதுனம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். அனுபவங்கள் வழியாக நல்ல முடிவு எடுப்பீர்கள். குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.

ஆகஸ்ட் முதல் சுக்கிர திசை.. ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள் யார் ?

ஆகஸ்ட் முதல் சுக்கிர திசை.. ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள் யார் ?

கடகம்:

பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது அவசியம்.

சிம்மம்:

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள்.

கன்னி:

மாணவர்கள் வீடுகளில் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் உங்களு எடுக்கும் பொழுது பெரியவர்களின் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய புகழ் மற்றும் செல்வாக்கு உயரும் நாள். முக்கிய காரியத்தை நீங்கள் தடை இன்றி முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் உங்களின் மதிப்பு உயரும். பொன் பொருள் சேர்க்கையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளிவட்டாரம் விரிவடையும். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

தனுசு:

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் சந்திப்பீர்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களால் முக்கிய காரியம் முடிவடையும்.

ராஜ வாழ்க்கை வழங்கும் குரு சுக்கிரன் சேர்க்கை.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?

ராஜ வாழ்க்கை வழங்கும் குரு சுக்கிரன் சேர்க்கை.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?

மகரம்:

இன்று புதிய நட்புகலின் அறிமுகம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான தனி அங்கீகாரம் பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.

கும்பம்:

பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மனதில் உள்ள கவலைகளை நெருங்கிய நபரிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.

மீனம்;

சொந்தங்களால் உங்களுக்கு சில மனக்கசப்புகள் வரலாம். பிள்ளைகளை பற்றிய விஷயங்களை ரகசியம் காப்பது அவசியம். காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல் விலகும் நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US