நாளைய ராசிபலன் (02-07-2026)

By Sakthi Raj Jul 01, 2026 01:30 PM GMT
Report

மேஷம்:

இன்று வெளியூர் பயணத்தால் லாபகரமான சூழ்நிலை உண்டாகும். மனதில் ஒரு சில குழப்பங்கள் விலகும். உயர் கல்விக்கான ஏற்பாடுகள் உங்களுக்கு சாதகமான பலனை பெற்றுக் கொடுக்கும்.

ரிஷபம்:

இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்வதால் மனதிற்கு அமைதியான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய திறமை வெளிப்படும். உங்களுக்கான வேலையில் அங்கீகாரமும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது அவசியம். உடன் பிறந்தவர்கள் வழியே நல்ல ஆதரவு கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றமும் வர்த்தக பணிகளில் லாபமும் கிடைக்கும்.

வியாழக்கிழமை தவறியும் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்

வியாழக்கிழமை தவறியும் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்

கடகம்:

சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும்.

சிம்மம்:

மனதில் நெருக்கமானவர்கள் வழியே நற்செய்திகளை கேட்பீர்கள். நினைத்த இடங்களில் உங்களுக்கான உதவிகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும் போட்டிகளில் ஈடுபாடு காண்பிப்பீர்கள்.

கன்னி:

இன்று வேலையில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். புதுமையான விஷயங்களை ஆர்வம் உண்டாகும்.

துலாம்:

தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.

விருச்சிகம்:

மற்றவர்களின் கருத்துக்கு அதிக அளவில் மதிப்புகள் கொடுக்க வேண்டாம். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

தனுசு :

கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த குழப்பம் விலகும். எதிர்கால தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும்.

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இன்று முதல் கைபேசிக்கு தடை

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இன்று முதல் கைபேசிக்கு தடை

மகரம்;

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் முக்கிய ஆலோசனை பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உடன் பிறப்புகளில் உடைய முழு அன்பையும் பெறுவீர்கள்.

கும்பம்:

எதிர்பாராத சில பயணங்கள் வழியாக அலைச்சல் உருவாகலாம். இனம் புரியாத சிந்தனைகள் தோன்றி மறையும். நண்பர்களிடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

மீனம்:

கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். திறமைக்கு ஏற்ப மதிப்புகள் கிடைக்கும் நாள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US