நாளைய ராசிபலன்(03-07-2026)
மேஷம்:
இன்று உழைப்பிற்கு ஏற்ற மதிப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். சாதகமான நாள்.
ரிஷபம்:
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் நல்ல செய்தி வந்து சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்:
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த கவனம் விலகும். உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் வரலாம்.
கடகம்:
திட்டமிட்ட சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை கிடைக்கும்.
சிம்மம்:
மனதில் தோன்றிய எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையால் நல்ல ஆதரவு உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து செலவு செய்வது அவசியம். புத்துணர்ச்சியான நாள்.
கன்னி:
வியாபார பணிகளில் சில நுட்பங்களை அறிந்து செயல்படுவதால் நல்ல லாபம் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பதால் சேமிப்புகளை தொடரலாம். மனதில் புது விதமான ஆசைகள் உண்டாகும்.
துலாம்:
எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படலாம். அதிரடியான சில செயல்கள் வழியாக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் மன அமைதி உண்டாகும். உழைப்பால் முன்னேற்றத்தை காண்பீர்கள்
விருச்சிகம்:
உறவினர்களின் வருகையால் வீட்டில் மன மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்
தனுசு:
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்படும். முதலீடுகளால் லாபம் உண்டு.
மகரம்:
தந்தை வழியே நல்ல ஆதரவை பெறுவீர்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வழக்கு விஷயங்களில் நிதானம் கடைபிடிப்பது அவசியம்.
கும்பம்:
வேலை செய்யும் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரங்களுக்கு சாதகமான பலன் கொடுக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் உண்டாகும்.
மீனம்:
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக சென்றவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியாக நல்ல லாபம் கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனை தோன்றும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |