நாளைய ராசிபலன்(19-07-2026)

Report

மேஷம்:

இவர்களுக்கு இன்று தேவை இல்லாத மன குழப்பங்கள் வரலாம். வழக்கு தொடர்பாக முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். பண பற்றாக்குறை விலகும். மதியம் நற்செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:

இன்று உங்கள் வெளிவட்டாரம் விரிவடையும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

மிதுனம்:

காலை முதல் திருமண வாழ்க்கை தொடர்பான மன குழப்பங்கள் ஏற்படலாம். தாயின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வேலைக்காக செய்யும் இடம் மாற்றும் சாதகமாக அமையும்.

2026: கொட்டி கொடுக்க வரும் சனி பகவான்.. கஷ்டத்தில் இருந்து விடுதலை பெறும் ராசிகள்

2026: கொட்டி கொடுக்க வரும் சனி பகவான்.. கஷ்டத்தில் இருந்து விடுதலை பெறும் ராசிகள்

கடகம்:

இன்று நண்பர்களை பற்றி புரிதல் உண்டாகும். யாரிடமும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதீர்கள். வாழ்க்கை துணை உங்களுடைய பேச்சை கேட்டு நடப்பார்கள்.

சிம்மம்:

இன்று ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தேவையில்லாத ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம். முடிந்தவரை எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்வது அவசியம்.

கன்னி:

இன்று மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை வரலாம். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று பொறுமையாக முடிவெடுப்பது அவசியம்.

துலாம்:

உங்கள் வீடுகளில் உங்களைப் பற்றிய மதிப்பு உயரும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

யாருடைய வாழ்க்கையை பற்றியும் நீங்கள் விமர்சனம் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

இந்த 4 ராசிகளால் ஒருவருடைய ரகசியத்தை பாதுகாக்கவே முடியாதாம்

இந்த 4 ராசிகளால் ஒருவருடைய ரகசியத்தை பாதுகாக்கவே முடியாதாம்

தனுசு:

இன்று பிள்ளைகள் வாழ்க்கையின் மீது உங்களுக்கு அதீத கவனமும் அக்கறையும் உண்டாகும். வாழ்க்கை துணையின் வீட்டாரிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை வைத்துக் கொள்ள வேண்டாம்.

மகரம்:

இன்று காலை முதல் மணம் சற்று விரக்தியான நிலையில் காணப்படும். சொந்தங்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

கும்பம்:

வேலைக்காக ஒரு சிலர் திடீர் வெளியூர் செல்ல நேரலாம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கைகூடி வரும்.

மீனம்:

இன்று உங்களுக்கு வாழ்க்கையை பற்றிய ஒரு புரிதல் உண்டாகும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சினை உள்ளது. ஆன்மீக பயணங்களில் கலந்து கொள்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US