நாளைய ராசி பலன் (13-06-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டிக்கொடுத்து செல்வீர்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
வேலை பளு அதிகரிக்கும். எதையும் நிதனமாக செய்யவேண்டியது அவசியம். கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். பணத்தை சேமிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் மன கசப்புகள் வந்து செல்லும். எழுத்தாளருக்கு பொன்னான நாளாக அமையப்போகிறது. நற்செய்தி வந்து சேரும்.
கடகம்:
தொழிலில் புதிய அணுகுமுறையால் நல்ல லாபம் பெறுவீர்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்:
வியாபாரம் தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்லும் நிலை வரலாம். உடன் பிறந்தவர்களால் சில குழப்பங்கள் வந்து செல்லும். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.
கன்னி:
இன்று எதிர்பாராத நபர்களை சந்திக்கக்கூடிய நிலை வரலாம். குடும்பத்தில் சில மனக்கசப்புகளும் மன வருத்தங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அமைதியே கடைபிடிக்க வேண்டும்.
துலாம்:
இன்று வேலையில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். ஒரு சிலருக்கு வேலை ரீதியாக பாராட்டுகளும் சில அங்கீகாரங்களும் கிடைக்கும். பொருளாதார தட்டுப்பாடுகள் விலகி முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்:
தொழில் தொடர்பாக நீங்கள் யாரிடமும் ஆலோசனையை பெற வேண்டாம். சுயமாக சிந்தித்து முடிவெடுத்தால் மட்டுமே இன்றைய நாள் நன்மையாக அமையும். உறவினர்கள் ஆதரவு உண்டு.
தனுசு:
இன்று உடல் சோர்வும் மனசோர்வும் சந்திப்பீர்கள். பிள்ளைகளுக்கான சில முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். பணப்பிரச்சினை விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்:
இன்று நண்பர்களின் வழியே உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். முக்கியமான நபர்களை சந்தித்து உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிறீர்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும்.
கும்பம்:
எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகள் நலனுக்காக சேமிப்பை தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.
மீனம்:
பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாய தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாளாக அமையப் போகிறது. யாரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |