ராசி பலன்(20-06-2025)

Report

மேஷம்:

ஒரு சிலருக்கு இன்று வெளியூர் பயணத்தால் சில சங்கடங்கள் தோன்றி மறையலாம். வெளிநபரை நம்பி எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும். சிலர் பொன் பொருள் சேர்க்கையால் மனம் மகிழ்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்:

மாணவர்கள் கட்டாயம் படிப்பில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். சொந்த பிரச்சனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்:

உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். தந்தை வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம்:

சிலருக்கு வேளையில் இடமாற்றம் உண்டு. நீண்ட தூரப் பயணம் பயனுள்ளதாக இருக்கும். செலவுகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்களுக்குப் பணம் செலவழிக்க நேரிடலாம்.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

கன்னி:

ஒரு சிலர் நெருங்கியவர்களின் தவறான வழிகாட்டுதலால் திசை மாறி செல்ல வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

இன்று உங்கள் மனதில் உள்ள கவலைகள் விலகும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வரும். சகோதரன் வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். நற்பெயர் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

பெரியவர்களின் அறிவுரைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். மன அமைதிக்காக தனியாக இருக்க விரும்புவீர்கள். முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக புதிய யோசனைகள் உதவியாக இருக்கும்.

தனுசு:

பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மையான நாள்.

மகரம்:

இன்று குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் விலகும். இறைவழிபாடு மேற்கொள்வீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை.

கும்பம்:

நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் வரும். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். சகோதரி வழி உறவுகளில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நன்மை கொடுக்கும்.

மீனம்:

மனதில் தோன்றிய எதிர்மறைகள் எண்ணங்கள் விலகும். வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட தேவையற்ற செலவுகள் விலகி செல்லும். இறைவழிபாடு நன்மை அளிக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US