நாளைய ராசி பலன் (26-06-2026)
மேஷம்:
இன்று எதிர்பாராத சில நபர்களின் சந்திப்புகளால் வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் நடக்கும். வாழ்க்கை துணையுடன் விட்டு கொடுத்து செல்வது அவசியம். பண பற்றாக்குறை தீரும்.
ரிஷபம்:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்வது அவசியம்.
மிதுனம்:
வம்பு வழக்குகளில் நீங்கள் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது அவசியம்.
கடகம்:
குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை உயரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேர்வார்கள்
சிம்மம்:
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். முடிந்தவரை கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சகோதரர்களால் நற்பெயர் கிடைக்கும்.
கன்னி:
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். படிப்பிற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்:
இன்று நீங்கள் காலையில் இருந்து மன பதற்றத்துடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழி பிறக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
விருச்சிகம்:
குழந்தைகளிடம் நீங்கள் மனம் விட்டு பேசுவது அவசியம். பெற்றோர்களிடம் தேவையில்லாத கருத்து மோதல்கள் வைத்துக் கொள்ள வேண்டாம். பணியிடங்களில் நன்மை உண்டாகும்.
தனுசு:
உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு அதிக ஈடுபாடு உண்டாக கூடிய நாள்.
மகரம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். திருமண வரன் நீங்கள் நினைத்தது போல் அமையும்.
கும்பம்:
மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். வேலையில் மன அழுத்தம் விலகும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள், நன்மையான நாள்.
மீனம்:
பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் சொந்த ஊருக்கு சென்று சொந்தங்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்யும் நிலை உண்டாகும்.