கண் திருஷ்டியின் தீய பலன் குறைய வீட்டில் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்

By Sakthi Raj Jun 25, 2026 06:06 AM GMT
Report

  கண் திருஷ்டி என்பது நம்முடைய ஆற்றல்களை தொந்தரவு செய்யக்கூடிய எதிர்மறை ஆற்றல் ஆகும். அதாவது ஒருவருடைய கெட்ட எண்ணம் நம்முடைய அதிர்வலைகளை தாக்கக்கூடியதாக அமைவதுதான் இந்த கண்திருஷ்டி. அவ்வாறு, கண் திருஷ்டி நமக்கு வருகின்ற பொழுது நாம் இயல்பாக செய்கின்ற காரியங்கள் கூட காலதாமதம் ஆகுவதை நாம் காணலாம்.

சில நேரங்களில் உடல் உபாதைகள் போன்ற சங்கடமான நிலை சந்திப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அதனால் தான் பெரியவர்கள் முற்காலங்களில் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு குடும்பத்துடன் அமர்ந்து அவர்களுக்கு திருஷ்டி கழித்து போடுவது உண்டு.

கண் திருஷ்டியின் தீய பலன் குறைய வீட்டில் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம் | Rock Salt Nutmeg Remedies For Kan Thirshti

2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

அப்படியாக, பொல்லாத கண் திருஷ்டியால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரங்களை பற்றி பார்ப்போம். கண் திருஷ்டி விலக ஒரு கண்ணாடி பவுல் எடுத்துக்கொண்டு அதில் முதலில் ஒரே ஒரு ஜாதிக்காய் போட்டு அதன் மேல் கல் உப்பை கொட்டி நிரப்ப வேண்டும்.

ஜாதிக்காய் வெளியே தெரியாத அளவிற்கு கல் உப்பு மட்டும் நிரம்பி இருக்க வேண்டும். கல் உப்புக்கு மேலே ஐந்து மிளகாய் வைத்து உங்கள் வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள் போதும். இவ்வாறு செய்கின்ற பொழுது நம்முடைய வீடுகளில் ஏற்படுகின்ற வருமான தடைகள் விலகும், பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் கைகளுக்கு வந்து சேரும். இதை வீட்டில் எல்லோரும் கண்களிலும் படும் இடங்களில் அதாவது வரவேற்பு அறையில் அழகாக ஒரு மேஜையின் மேல் தயார் செய்து வைத்துவிடுங்கள்.

கண் திருஷ்டியின் தீய பலன் குறைய வீட்டில் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம் | Rock Salt Nutmeg Remedies For Kan Thirshti

2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

வாரத்திற்கு ஒரு நாள் கல் உப்பையும் மேலே இருக்கின்ற மிளகையும் எடுத்து தண்ணீரில் கரைத்து விடலாம். ஜாதிக்காய் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஜாதிக்காயை மாற்றி வைப்பது போதுமானது.

மிகவும் எளிமையான இந்த பரிகாரம் நமக்கு மிகப்பெரிய பலன்கள் தரும். பலருக்கும் இதை செய்வதால் நமக்கு என்ன மாற்றங்கள் கிடைக்கப் போகிறது என்ற ஒரு கேள்விகள் வரலாம். ஆனால், கல் உப்பு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி எடுக்கக்கூடிய சக்தி கொண்டது.

ஜாதிக்காய் தீய சக்திகளை அடியோடு விரட்டி நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளை அகற்றவும் சக்தியாக செயல்படுகிறது. மேலும், நம்முடைய பொருளாதார சிக்கல்கள் விலகி குடும்பத்தில் மன அமைதி கிடைக்கவும் இவை உதவுகிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US