நாளைய ராசி பலன் (01-03-2026)

Report

மேஷம்:

இன்று மனதில் சில கவலைகள் வந்து செல்லும். சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். சொந்தங்கள் மத்தியில் இருந்த மனக்கசப்புகள் விலகும்.

ரிஷபம்:

உங்கள் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிதாக வீடு வாகனம் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

மிதுனம்:

இன்று வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள்.

கடகம்:

தந்தை உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசு வழி விஷயங்களில் இருந்து வந்த சங்கடம் விலகும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்பதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

சிம்மம்:

இன்று முக்கிய நபர்களை சந்திக்கும் நாள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடுமாற்றங்கள் குறையும். தாய் வழி உறவுகளால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் செல்வீர்கள்.

கன்னி:

வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மாணவர்கள் இன்று படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். திருமண தொடர்பான விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். முகம் தெரியாத நபர்களிடத்தில் தேவையில்லாத பேச்சுவார்த்தைகள் வைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்:

இன்று திடீர் மருத்துவ செலவுகளை நீங்கள் சந்திக்கலாம். வாழ்க்கை துணையின் வழியேஇருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் கவனமாக பேச வேண்டிய நாள்.

தனுசு:

குடும்பத்தில் ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். குடும்பத்துடன் பிடித்தமான உணவுகள் சமைத்து சாப்பிடுவீர்கள். சொந்தங்கள் மத்தியில் கவனமாக பேச வேண்டும்.

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

மகரம்:

இன்று மதியமேல் வாழ்க்கையில் ஒரு விரக்தி நிலையை உணர்வீர்கள். நண்பர்களிடம் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்:

வருமானத்தில் சந்தித்து வந்த தடைகள் யாவும் விலகும். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மன கசப்புகள் நீங்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள்.

மீனம்:

இன்று உங்கள் கனவுகள் நினைவாக நான். மாணவர்கள் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US