நாளைய ராசிபலன் (06-03-2026)
மேஷம்:
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். ஒரு சிலர் பொதுக் காரியங்களிலும் சமூக சேவைகளிலும் பங்கு கொள்வார்கள். தொழில்நுட்பம் சார்ந்த புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
மாணவர்கள் உயர்நிலை கல்விக்கு தேவையான விஷயங்களை பெற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஒரு நல்ல வளர்ச்சி உண்டு. காதலில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
அரசு தொடர்பான விஷயங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்துவீர்கள். வாகன பயணங்களில் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
கடகம்:
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு உண்டாகலாம்.
சிம்மம்:
வேலையில் புதிய புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். கடன் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நேரத்தை ஆக்கபூர்வமாக செலவு செய்வீர்கள்.
கன்னி:
தனிப்பட்ட விஷயங்களை நாம் ஒரு சிலரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்:
உங்களுடைய நட்புகள் ரீதியாக சில உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
விருச்சிகம்:
வேலையில் சில சங்கடம் உருவாகலாம். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தந்தை ஆதரவாக இருப்பார்.
தனுசு:
உங்களுடைய உழைப்பு ஏற்ற மதிப்பு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்ந்த கௌரவம் உண்டாகும். மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள்.
மகரம்:
மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஆராய்ச்சி செய்யக்கூடிய சிந்தனை மனதில் உண்டாகும். கோயில் திருப்பணிகளில் சிலர் பங்கு கொள்வார்கள்.
கும்பம்:
பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும். வேலை ரீதியாக ஒரு நல்ல மனமாற்றம் உண்டாகும். உங்களுடைய சிந்தனைகளை மட்டும் சற்று கவனமாக இருந்தால் நல்ல நாளாக அமையும்.
மீனம்:
சமுதாய பணிகளில் பங்கு கொள்வீர்கள். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்ள முடிவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைக்கூடிவரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |