நாளைய ராசி பலன் (27-03-2026)

Report

மேஷம்:

இன்று பயணங்கள் வழியாக முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். சமுதாய பணிகளில் சிலர் பங்கு கொள்வீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்:

குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு இலக்கியம் சார்ந்த விஷயங்களில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதாரத்தில் உயர்வு பெறுவீர்கள். உங்கள் சிந்தனையில் இருக்கக்கூடிய குழப்பங்கள் விலகும்.

2026: தமிழ் புத்தாண்டு: கடகம் முதல் மீன ராசி வரை எப்படி இருக்க போகிறது?

2026: தமிழ் புத்தாண்டு: கடகம் முதல் மீன ராசி வரை எப்படி இருக்க போகிறது?

கடகம்:

இன்று மற்றவர்களை எதிர்பார்த்து எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுவதால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.

சிம்மம்:

இன்றைய எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:

மனதில் நினைத்த காரியம் கைக்கூடி வரும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒரு சிலர் சமூகப் பணிகளில் பங்கு கொண்டு முன்னேற்றம் அடைவீர்கள். உயர்வு பெறக்கூடிய நாள்.

துலாம்:

புதுவிதமான பொருட்களை வாங்குவதில் மனம் அதிக ஆர்வம் செலுத்தும். தம்பதிகளுக்கு இடையே புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மந்தமான நிலையை காண்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

ராமாயணத்தை படித்த முழு பலனை கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம்

ராமாயணத்தை படித்த முழு பலனை கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம்

தனுசு:

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையலாம். வேலை தொடர்பாக சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைப் பற்றி சில மறைமுகமான விமர்சனங்களை சந்திக்கலாம். கலைத்துறையில் கவனம் வேண்டும்.

மகரம்:

இன்று சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்கள் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்:

இன்று உங்கள் பேச்சுக்கு மரியாதையும் மதிப்பும் உயரும். ஒரு சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஆசை நிறைவேறும் நாள். நினைத்த இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

மீனம் :

இன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு மறதி சார்ந்த விஷயங்கள் வரலாம். பிள்ளைகளின் வழியாக உங்களுக்கு பெருமை உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US