நாளைய ராசி பலன் (04-05-2026)

Report

 மேஷம்:

இவர்களுக்கு இன்று சட்டரீதியான சில பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களால் முழு ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:

நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம். பொருளாதார விஷயங்களில் கவனமாக இருங்கள்.

மிதுனம்:

குடும்பத்தில் காலை முதல் சில மன குழப்பமான சூழ்நிலை உருவாகும், பிள்ளைகள் உங்களுக்கு பெயர் புகழ் கிடைக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வார்த்தைகளும் குடும்பத்தினரிடம் பேசாதீர்கள். யாரை நம்பியும் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடாதீர்கள். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.

2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

சிம்மம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒரு சிலருக்கு இன்று புத்தக வாசிப்பதில் அதிக ஆர்வம் வரலாம். உங்களை சுற்றி உள்ள நபர்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய அமைப்பு உருவாகும்.

கன்னி:

கடந்த கால தவறுகளை எண்ணி வருத்தப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பேச்சிற்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.பணத்தடை நீங்கும்.

துலாம்:

வேலை பளு அதிகரிக்கும். உங்கள் பணவரவுகளை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.

விருச்சிகம்:

சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். நெருங்கியவர்களால் சில மன வேதனையை பெறலாம்.

தனுசு:

பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய கவலைகள் மேலோங்கும். தாய் உடல் நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.

பாவங்கள் யாரையும் சும்மா விடாது.. மகாபாரதம் உணர்த்தும் 5 கசப்பான உண்மைகள்

பாவங்கள் யாரையும் சும்மா விடாது.. மகாபாரதம் உணர்த்தும் 5 கசப்பான உண்மைகள்

மகரம்:

அரசியலில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்க போகிறது. விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள்.

கும்பம்:

எந்த ஒரு முடிவு களையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்க வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். பொருளாதாரத்தில் சந்தித்த சிக்கல் விலகும்.

மீனம்:

ஒரு சிலருக்கு இன்று இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் உண்டாகும். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பணம் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US