நாளைய ராசி பலன் (15-05-2026)
மேஷம்:
தேவை இல்லாத நபர்களிடம் உங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பண வரவில் இருந்த தடை விலகும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
ரிஷபம்:
நண்பர்களை சந்தித்து முக்கியமான வேலைகளை செய்வீர்கள். உங்கள் சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபடுவீர்கள்.
மிதுனம்:
அரசு வழியாக உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.
கடகம்:
மன ரீதியாக நீங்கள் குழப்பங்களை சந்திப்பீர்கள். பணம் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடை விலகும். கலை துறையில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
உணவு தொழில் செய்பவர்களுக்கு இன்று முக்கியமான நாள். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். குலதெய்வ வழிபாடுகளில் ஆர்வம் கொள்வீர்கள். மாலை மேல் நற்செய்தி வரும்.
கன்னி:
வேலையில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். திருமண வரன் தொடர்பான விஷயங்களில் இருந்து தடைகள் விலகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
துலாம்:
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த கவலைகள் விலகும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கவலைகள் விலகும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் உள்ள தடை விலகும்.
விருச்சிகம்:
சிலர் சொந்த ஊருக்கு சென்று நேரம் செலவு செய்வார்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தந்தை உடல் நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு:
உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கசப்புகள் விலகும். வங்கி தொடர்பான விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் விலகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாள்.
மகரம்:
புதிய வாய்ப்புகள் தேடி வரும். காதல் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களுக்கு நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
கும்பம்:
உங்கள் உடமைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்கவழங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு முக்கியமான நாள்.
மீனம்:
வாழ்க்கையை துணைக்காக சில முக்கியமான விஷயங்கள் செய்துக் கொடுப்பீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கியமான நாளாக அமைய போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |