இன்றைய ராசி பலன்(25-06-2025)

Report

 மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் சிக்கல் உண்டாகும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

மனதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மிதுனம்:

இன்று வண்டி வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவப்பெயர் உண்டாகும் காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகி செல்லும்.

கடகம்:

இன்று பலரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைத்தூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

சிம்மம்:

இன்று உங்கள் வருமானத்தில் சரிவை சந்திக்க நேரலாம். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நன்மை உண்டாக்கும்.

கன்னி:

மாணவர்கள் படிப்பதில் சிறந்து விளங்குவார்கள். இன்று நண்பர்களால் சிலர் துரோகத்தை சந்திப்பார்கள். இறைவழிபாடு வரும் ஆபத்துகளை தவிர்த்து நன்மை வழங்கும்.

துலாம்:

இன்று மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கேள்விக்கு பதில் கிடைக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தாய் வழி உறவால் நன்மை உண்டாகும்.

கெட்ட காலம் தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள்- இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்

கெட்ட காலம் தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள்- இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்

விருச்சிகம்:

உடல் நிலையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வார்கள். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு நல்ல முடிவை கொடுக்கும்.

தனுசு:

நினைத்த காரியம் நிறைவேறும். சந்தோஷமான செய்தி உங்களை தேடி வரும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் உங்களை வந்து சேர்வார்கள். உடல் நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும்.

மகரம்:

சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் உண்டாகும். தியானம் செய்வதால் மனப்பதட்டம் குறையும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்:

நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். வெளியூர் செல்வதால் ஆதாயம் கிடைக்கும். நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மதியம் நற்செய்தி தேடி வரும்.

மீனம்:

வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு நல்ல முடிவை கொடுக்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். இறைவழிபாடு மட்டுமே சிக்கலில் இருந்து விடுபட ஒரே வழி. குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US