நாளைய ராசி பலன் (02-04-2026)
மேஷம்:
இன்று நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள். பெரியவர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள். சிறு தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சொந்தங்கள் மத்தியில் உங்களுடைய நற்பெயர் உயரும். இலக்கியப் பணிகளில் பங்கு கொள்வீர்கள்.
மிதுனம்:
குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வண்டி வாகனம் மாற்றக்கூடிய யோகம் உருவாகும். இன்று சிக்கல்கள் நிறைந்திருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
இன்று நினைத்த காரியங்களை நினைத்தது போல் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.
சிம்மம்:
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் சார்ந்த சில முதலீடுகள் செய்வது பற்றி ஆலோசனை செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி:
எதிர்காலம் பற்றிய பயம் வரும். பயணங்கள் வழியாக அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். செயல்களில் தாமதம் உண்டாகலாம். சேமிப்பில் கவனம் வேண்டும்.
துலாம்:
உங்களுக்கு உறவினர்கள் வழியில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களை பற்றிய புரிதல் உருவாகும். இன்று பார்வை தொடர்பான பிரச்சனைகளை சிலர் சந்திக்கலாம்.
விருச்சிகம்:
அரசு வழியில் உங்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று வேலையில் சில அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு:
இன்று புதிய வாகனங்கள் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். மருத்துவ சிகிச்சையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் நினைத்ததை சாதிக்கக்கூடிய அற்புதமான நாள்.
மகரம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் வந்து சேரும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். நம்பிக்கை நிறைந்த நாள்.
கும்பம்:
இன்று தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வியாபார பயணங்களில் வீண் அலைச்சல்களும் விரைவும் உண்டாகலாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
குடும்பத்தினர் உடைய முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன் இருப்பவர்களால் சில கசப்புகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |