நாளைய ராசி பலன் (03-03-2026)
மேஷம்:
இன்று வேலை ஆட்களின் ஒத்துழைப்பால் ஒரு முக்கியமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய இலக்குகளை அடைவதற்கு திட்டமிடுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும்.
ரிஷபம்:
இன்று விவசாயம் சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். புதிய வாகனம் வாங்குவதை பற்றி வாழ்க்கை துணையுடன் பரிசீலனை செய்வீர்கள். அமைதியான நாள்.
மிதுனம்:
இன்று எதிலும் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் உங்களுக்கு கைப்பிடி வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் விலகும்.
கடகம்:
இன்று உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் வழியாக இனிய வாய்ப்புகள் தேடி வரும்.
சிம்மம்:
இன்று சக ஊழியர்களிடம் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உங்களுடைய கனிவான பேச்சுகளால் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
கன்னி:
மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். மறைமுகமான எதிரிகள் விளங்குவார்கள்.
துலாம்:
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் செய்வீர்கள். உங்கள் நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
கணவன் மனைவி இடையே ஒற்றுமையை உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனை விலகும். பழைய உறவினர்களை சந்திப்பீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு:
மனதில் பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். உங்கள் வீடுகளில் முக்கிய நபரின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சகோதரி வழி உறவால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
மகரம்:
இன்று கோபம் குறைத்து செயல்பட வேண்டும். சிலருக்கு திடீர் செலவுகள் வரலாம். உங்கள் செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சிலருக்கு மறதி நிறைந்த நாள்.
கும்பம்:
வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும் நாள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் பெறுவீர்கள்.
மீனம்:
கால்நடை மீது ஆர்வம் செல்லும். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடல் சோர்வு நிறைந்த நாள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |