2026: சனி பெயர்ச்சியில் மிகவும் சுமாரான பலன்களை பெறும் ராசிகள்

By Sakthi Raj Mar 02, 2026 11:30 AM GMT
Report

ஜோதிடத்தில் நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருக்கிறார். மேலும் சனி பகவான் தான் நீதிமானாகவும் விளங்குகிறார். அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மார்ச் 6ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

இவர் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்படியாக சனி பகவானுடைய இந்த பெயர்ச்சியானது குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்ய காத்திருந்தாலும் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களும் இல்லாமல் தீய பலன்களும் அல்லாமல் ஒரு சுமாரான பலன்களை கொடுக்க இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சனி பெயர்ச்சியில் மிகவும் சுமாரான பலன்களை பெறும் ராசிகள் | 3 Zodiac Must Be Carefull On 2026 Sanipeyarchi

2026: தனுசு ராசிக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது?

2026: தனுசு ராசிக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது?

மீனம்:

மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. அதனால் தேவை இல்லாமல் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாதீர்கள். அவசரமாக ஒரு சில முடிவுகளை எடுக்காதீர்கள். அதேபோல் பயணங்கள் மற்றும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

யாரையும் இந்த காலகட்டங்களில் உதாசீனம் செய்யாதீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்வதால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு முக்கியமான நபர்களின் நட்பு கிடைக்கும். இவர்கள் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறுவார்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்கு பாத சனி நடக்கிறது. உயர் அதிகாரிகளிடம் நீங்கள் கவனமாக பேச வேண்டும். உறவுகளிடம் உணர்ச்சிவசப்படுவதால் தேவையில்லாத சிக்கல் வரலாம். வேலையில் திடீர் இடம் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

ஒரு சிலருக்கு வீடுகளில் திடீர் சுப காரிய நிகழ்ச்சிகளால் கடன் வாங்கக்கூடிய நிலை உண்டாகலாம். வயிறு நுரையீரல் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

2026: நாளை சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?

2026: நாளை சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?

சிம்மம்:

சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. இந்த நேரங்களில் மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். இடமாற்றம் பதவி உயர்வு போன்றவை கிடைப்பது சில தாமதங்களை சந்திக்கலாம்.

குடும்பத்தில் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவதற்கு மனம் விட்டு பேச வேண்டும். தேவையில்லாத பேச்சுகளால் வீண் எதிரிகளை சம்பாதிக்க கூடிய நிலை வரலாம். பொறுமையாக கையாள வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US