நாளைய ராசி பலன்(07-11-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். கவனசிதறலை தவிர்த்தால் பிரச்சனையை குறைக்கலாம். வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

உங்கள் வாழ்க்கை துணையிடம் நல்ல புரிதல் உண்டாகும். மனதில் நீண்ட நாட்களுக்கு மகிழ்ச்சி காண்பீர்கள். ஆலய திருப்பணிகளில் பங்குகொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்:

இன்று அரசியல்வாதிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பிறர் விமர்சனம் செய்யும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள். மன உளைச்சலான நாள்.

கடகம்:

இன்று உங்கள் வீடுகளில் புதிய நட்புகள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

சாணக்கியர் நீதி: இந்த 4 செயல்கள் ஒருவரிடம் இருந்தால் கவனமாக இருங்கள்

சாணக்கியர் நீதி: இந்த 4 செயல்கள் ஒருவரிடம் இருந்தால் கவனமாக இருங்கள்

சிம்மம்:

குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையிட்டால் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்கலாம். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடன் பிறந்தவர்கள் இடையே மோதல்கள் உண்டாகும்.

கன்னி:

இன்று மாணவர்கள் படிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் மாலை வரலாம். தாயிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.

துலாம்:

இன்று மனதில் ஒரு புத்துணர்ச்சி பார்ப்பீர்கள். உங்கள் நட்புகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த விஷயம் நடக்க உள்ளது. மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் சொல்லாதீர்கள். கணவன் வழி சொந்தங்களால் நீங்கள் மகிழ்ச்சி அடையும் நாள். தாய் மாமன் வழி உறவுகளிடம் கவனம் தேவை.

தனுசு:

இன்று வருகின்ற பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும் நாள்.

கண் திருஷ்டி விலக இந்த ஒரு எளிய பரிகாரம் போதும்- செய்து பாருங்கள்

கண் திருஷ்டி விலக இந்த ஒரு எளிய பரிகாரம் போதும்- செய்து பாருங்கள்

மகரம்:

இன்று நீங்கள் வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத நபரின் அறிமுகத்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை இனிமையாக செல்லும் நாள்.

கும்பம்:

மருத்துவர்களுக்கு இன்று பொன்னான நாள். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். மதியம் மேல் உங்களுக்கு பிடித்த விஷயஙங்களை செய்து மகிழும் நாள்.

மீனம்:

உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வீண் கோபம் தவிர்க்க வேண்டும். நட்புகளிடம் சற்று கவனமாக பேசுங்கள். தொழில் ரீதியாக சில குழப்பங்கள் வரலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US