நாளைய ராசி பலன்(08-11-2025)
மேஷம்:
இன்று உங்களின் மனதில் தெளிவு பிறக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் தன்மை பிறக்கும். மாலை மேல் சிலர் பொழுது போக்கு விஷயங்களில் பங்கு கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்:
வீடுகளில் இருந்து வந்த குழப்பமான சூழல் குறையும். திருமண வாழ்க்கையை பற்றி தெளிவான முடிவு எடுக்கும் நாள். தொழில் ரீதியாக நீங்கள் நினைத்த வேலை சரியாக நடக்கும்.
மிதுனம்:
சில நண்பர்கள் உங்களுக்கு முக்கியமான ஆலோசனை சொல்ல நேரலாம். ஆன்மீக பாதையானது இன்னும் விரிவடையும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.
கடகம்:
தந்தை உடல் நிலையில் சற்று கவனம் தேவை. பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மதியம் மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
சிம்மம்:
இன்று பிள்ளைகளுடன் பொழுது போக்கு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் பரபரப்பாக இருக்கலாம். நிம்மதியான நாள்.
கன்னி:
நீங்கள் நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டிய நாள். சொந்த வாழ்க்கையை பற்றி உடன் வேலை செய்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். திருமண பேச்சுக்களில் நிதானம் தேவை.
துலாம்:
இன்று படிப்பு தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். வேலை பளு அதிகரிக்கலாம். நன்மையான நாள்.
விருச்சிகம்:
நீங்கள் பிறரிடம் தேவை இல்லாமல் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு சில முக்கியத்துவம் குறைந்தது போல் தெரியலாம்.
தனுசு:
இன்று எதிர்காலம் பற்றிய கவலை விலகும். கணவன் உங்களை புரிந்து நடந்து கொள்வார். பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். மதியம் மேல் உடல் சோர்வு விலகும்.
மகரம்:
காலை முதல் சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யக்கூடிய நாள். வீண் வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும் நாள்.
கும்பம்:
இன்று தேவை இல்லாமல் மனம் எரிச்சல் அடையலாம். அரசாங்க வழியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பெயர் புகழ் கிடைக்கும் நாள். எதிர்பாராத நட்புகள் பெறுவீர்கள்.
மீனம்:
உங்கள் குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு பொன்னான காலம். மதியம் மேல் நீங்கள் நினைத்த விஷயங்கள் நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |