இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(17.06.2024)
மேஷம்
நேற்றைய தினம் போல் அதிக சோர்வுடன் இல்லாமல் உற்சாகமாக செயல்படக்கூடிய நாள்.குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம்.கவனம் அவசியம்.தொழில் வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.நினைத்த பணம் கை வந்து சேரும்.
ரிஷபம்
சற்று பதட்டமான நாள்.வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்காது.எதிர் பார்த்த பணம் வந்து சேர தாமதம் ஆகலாம்.இறை வாழிபாடு நன்மை தரும்.
மிதுனம்
வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.மனம் குழம்பி கொண்டு இருக்கும்.உத்யோகத்தில் நெருக்கடிகள் உண்டாகலாம்.சற்று நிதானம் கடைபிடிப்பது நன்மை தரும்.
கடகம்
குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.எதிரிகள் தொல்லை முற்றிலுமாக விலகும்.செய்யும் செயல்களில் கடும் போராட்டம் பின்பே சாதிக்கமுடியும்.
சிம்மம்
வியாபாரத்தில் துணிச்சலுடன் சில காரியம் செய்ய இறங்குவீர்கள்.குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாமல் அவதிக்கு ஆளாகலாம்.மற்றவரால் செய்ய முடியாத செயலை செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கன்னி
குழப்பம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும்.வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்துசேரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும்.
துலாம்
உடல் சோர்ர்வு உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகலாம்.அலுவலகத்தில் நெருக்கடிகள் உண்டாகும்.சற்று தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்
வரவு அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவால் சங்கடம் அடைவீர்கள். பயணத்தில் நெருக்கடி தோன்றும்.உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். அலைச்சல் கூடும்.
தனுசு
மனம் காலையில் இருந்து எதையோ நினைத்து புலம்பி கொண்டு இருக்கும்.மதியம் மனதில் கொஞ்சம் தெளிவும் தெம்பும் பிறக்கும்.பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும்.
கும்பம்
முடிவு செய்த பின் மனம் குழம்பிக்கொண்டு இருக்கும்.தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் முயற்சியில் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்று எதிர்ப்பாராத பணம் வந்து கையில் சேரும்.மனம் தெளிவு அடையும்.பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |