(05/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

By Sakthi Raj Apr 05, 2024 03:55 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று உடலில் இருந்த பிரச்னைகைகள் விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். தொழில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சந்திரனால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று அரசியல்வாதிகளால் ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். வியாபாரத்தில் பல நாள் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒன்று இன்று முடிவுக்கு வரலாம்.  தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி வளர்ச்சி காண்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று நினைத்த காரியத்தை செய்யது முடிக்கும் நாள். வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் உண்டாகும், உங்கள் திறமை வெளிப்பட்டு உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம். தொழிலில் போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திக்க கூடும். சந்திராஷ்டம் என்பதால் கவனமுடன் எல்லா விஷயத்திலும் செயல்பட வேண்டும். உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்படலாம். மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும், எதிர்பார்த்த பண வரவுகள் வந்த சேரும் உங்கள் செல்வாக்கு உயரும். இன்று எடுக்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேற கூடிய நாள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று பல நாள் உடலில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மற்றவரின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தடைகளை கண்டு அறிந்து வெற்றிகளை அடைவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடமாக விலகி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பண வரவுகள் வந்து சேரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று மனதில் உற்சாகம் உண்டாகும் .வெளியூர் பயணத்தால் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து தடை விலகி வருமானம் அதிகாரிக்கும். அதை வைத்து கடனை அடைப்பீர்கள். பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை சரியாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு லாபத்தை பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று வரவு செலவுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் உயரும். உங்கள் சாமர்த்தியதால் தொழிலில் இருந்த போட்டிகள் விலகி வருமானம் உயரும் எதிர்பார்த்த தகவல்கள் உங்களை வந்த சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல் நிலையில் சங்கடங்கள் தோன்றும் .நீண்ட நாள் உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வர். தொழில் இடத்தில் முதலாளியிடம் பாராட்டுப் பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று மற்றவர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகலாம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் தோன்றும் வேலைபளு அதிகரிக்கும். பயணத்தில் எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள் .வரவை விட செலவு அதிகரிக்கும் .குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US