சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

By Sakthi Raj Nov 04, 2026 08:03 AM GMT
Report

சனிபகவான் என்றாலே எல்லோரும் பயப்படுவதுண்டு. அந்த வகையில், எல்லோரையும் நடுங்க செய்யக்கூடிய சனி பகவானையே திருவாரூர் தியாகேச பெருமானை வணங்கி வெற்றி பெறுகிறார் தசரத மகாராஜா. அதைப்பற்றி பார்ப்போம்.

பொதுவாக, சனி திசை என்றாலே கடுமையான காலகட்டமாக தான் இருக்கும். அந்த வகையில், தசரத மகாராஜாவிற்கு சனி திசை துவங்குகின்ற நேரம் அப்பொழுது மன்னரின் குல குருவான வசிஷ்டர் அவரிடம் சென்று உங்களுடைய குலதெய்வமான சிவபெருமான் இருக்கக்கூடிய திருவாரூர் செல்லுங்கள்.

அங்கு சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். பிறகு சனி பகவான் உங்களை நெருங்க மாட்டார் என்கிறார். அவர் சொன்னபடியே தசரத மகாராஜாவும் திருவாரூர் வந்து கமலாலய திருக்குளத்தில் நீராடுகிறார். பிறகு ஆரூர் எம்பெருமானை வழிபாடு செய்கிறார்.

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள் | Dasharatha Shani Stotram For Shani Dasha

தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு

தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு

இருந்தாலும், சனி பகவான் தசரத மகாராஜாவை பிடித்துக்கொள்ள வருகிறார். சிவபெருமானை வழிபாடு செய்த தசரத மகாராஜாவுக்கு ஏற்பட்ட துணிவினால் சனி பகவானையே எதிர்த்து போரிட்டு வெற்றியை பெறுகிறார்.

சனி பகவான் அதுவரையிலும் வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததே இல்லை. வாழ்க்கையில் முதன் முறையாக தோல்வியை கண்ட சனி பகவான் தசரதனிடம் "என்ன வரம் வேண்டும் கேள்" தருகிறேன் என்கிறார்.

உடனே தசரத மகாராஜா சனீஸ்வர பகவானே! நீங்கள் உங்களுடைய கடமையை செய்வதில் தவறுவதில்லை. உலக உயிர்களுக்கு சுக துக்கங்களுடைய வேறுபாட்டை உணர்த்தக்கூடிய வகையில் உங்களுடைய செயல்கள் இருக்கிறது.

இருப்பினும் அவர்களை நீங்கள் பிடித்துக் கொள்கின்ற பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். அண்ட சராசரங்களையும் படைத்து காத்து இறுதியில் சம்ஹாரம் செய்யக்கூடிய முழுமுதற் கடவுளாக இருக்கக்கூடிய திருவாரூர் தியாகராஜ ஈசன் வீற்றிருக்குடிய இடத்தில் தஞ்சம் என்று சரணடைந்த பிறகும் என்னை நீங்கள் துன்புறுத்த விரும்பினீர்கள்.

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள் | Dasharatha Shani Stotram For Shani Dasha

திருப்பதி பெருமாளுக்கு இந்த இரண்டு பொருட்கள் ஆகவே ஆகாதாம் என்ன தெரியுமா?

திருப்பதி பெருமாளுக்கு இந்த இரண்டு பொருட்கள் ஆகவே ஆகாதாம் என்ன தெரியுமா?

அதனால், தான் உங்களுடன் நான் போரிட்டு சிவபெருமானுடைய அருளால் வெற்றி பெற்றேன். எனவே திருவாரூர் வந்து கமலாலயத்தில் நீராடி எவர் ஒருவர் தியாகேச பெருமானையும் உங்களையும் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு தாங்கள்! நல்லதே செய்ய வேண்டும் தீங்கு செய்யக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்.

அதேபோல், சனீஸ்வர பகவானும் திருவாரூர் வருபவரை தன்னுடைய கண்டக சனி, பாத சனி, அஷ்ட சனி, அர்த்தாஷ்டம சனி எந்த காலங்களிலும் துன்புறுத்தாமல் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார். அதனால், தான் திருநள்ளாறில் வழிபாட்டை முடித்த நளச்சக்கரவர்த்தியும் திருவாரூரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

தன்னை இனியும் நவகிரகங்கள் துன்பப்படுத்தக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறார். இதனை அடுத்து தான் "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே" என்கின்ற பழமொழி வந்தது.

ஆக, சனிபகவானால் துன்பப்படுபவர்கள் நிச்சயம் ஒரு நாள் திருவாரூர் தியாகேச பெருமாளை வழிபாடு செய்யுங்கள். எம்பெருமான் உங்களை உயர்ந்த இடத்திற்கு கூட்டி செல்வார். அதைவிட முக்கியமாக சனி பகவானை உங்களிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்வார். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US