அதிர்ஷ்ட மழை:டிசம்பர் 16க்கு மேல் இந்த ராசிக்காரர்களை கையில் பிடிக்க முடியாது

Report

சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இதனால் சிலருக்கு நல்லது, சிலருக்கு கெட்டது நடக்கும்.இந்த முறை சூரியன் டிசம்பர் 16, திங்கள் கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறது.ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் தங்கியிருப்பார்.

அதன் பிறகு அவர் அடுத்த ராசிக்கு செல்வார். தற்போது சூரியன் விருச்சிக ராசியில் உள்ளார். டிசம்பர் 16 அன்று, அவர் தனுசு ராசிக்குள் நுழைவார். சூரியன் தனுசு ராசிக்குள் நுழைந்தவுடன் கர மாதம் தொடங்கும்.இந்த நேரம் 4 ராசிகளுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:

சூரியன் ராசி மாறுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத யோகம் உண்டாகும்.நீண்ட நாள் தடைபட்ட பணம் கைக்கு வரும்.தொழிலில் செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று கொடுக்கும்.அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும்.

சிம்மம்:

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதி ஆவார்.பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.குடும்பத்துடன் தொலை தூர பயணம் மேற்கொள்வீர்கள்.நஷ்டமான வியாபாரத்தை சரி செய்ய ஏற்ற மாதம்.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் சரி ஆகும்.எதிர்பாராத நட்பு உங்களுக்கு ஆதாயத்தை கொடுக்கும்.

திருக்கார்த்திகை 2024:திருவண்ணாமலை மகாதீபம் நேரலை ஒளிபரப்பு

திருக்கார்த்திகை 2024:திருவண்ணாமலை மகாதீபம் நேரலை ஒளிபரப்பு

துலாம்:

துலாம் அன்பரகளுக்கு நல்ல காலம்.தேடிய வேலை கிடைக்கும்.படிப்பில் மாணவர்கள் அக்கறை செலுத்துவார்கள்.விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற யோசனை நிறைவேறும்.உடல் நிலை முன்பை விட நல்ல முன்னேற்றமாக காணப்படும்.

கும்பம்:

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் மிகவும் நல்லது.சுபச்செய்தி வீடு தேடி வரும்.நீங்கள் கற்பனை செய்யாத அளவு அதிர்ஷடம் உங்கள் பக்கம் இருக்கும்.புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.நட்பு வட்டாரம் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.பூர்வீக சொத்து உங்களுக்கு உதவியாக இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US