இன்றைய ராசி பலன்(27.12.2024)
மேஷம்:
மாலை வரை செய்யும் வேலைகளில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.மன அமைதியை கொடுக்கும் நாள்.முடிந்தால் கோயிலுக்கு சென்று வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ரிஷபம்:
உடல் நிலையில் ஏற்பட்ட தொந்தரவுகள் சரி ஆகும்.வியாபாரத்தில் உங்களுக்கான வாடிக்கையாளர் இன்னும் அதிகம் ஆகுவார்கள்.பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும்.அமைதி காக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.மூன்றாம் நபரால் சில குழப்பங்கள் உருவாகலாம்.நிதானமாக செயல்படுவது பல பிரச்சனையில் இருந்து காப்பாற்றும்.
கடகம்:
குடும்பத்தினரால் சில சங்கடம் உருவாகும். கவனமாக செயல்படுவது நல்லது.பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உழைப்பாளர் போராடி வெற்றிபெற வேண்டியதாக இருக்கும்.
சிம்மம்:
இன்று மகன் தந்தையிடையே சிறு சிறு வாக்கு வாதம் உண்டாகலாம்.சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
கன்னி:
பணவரவு திருப்தி தரும். அஸ்தம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கண் சிகிச்சைக்காக ஒரு சிலர் மருத்துவரை சந்திப்பீர்.போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்.
துலாம்:
உடல் நிலையில் சில சங்கடங்கள் உருவாகும்.உங்களுக்கான எதிர்ப்புகளை சந்திப்பீர்கள்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான பாராட்டுகளை பெறுவீர்கள்.யோகமான நாள்.நினைத்தது நிறைவேறும்.
விருச்சிகம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது.நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
தனுசு:
நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி உங்களை வந்து அடையும்.பிறரை பற்றி புரிந்து கொள்வீர்கள்.நண்பர்கள் உதவி செய்வார்கள். பாதை தெரியும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.
மகரம்:
மற்றவர்கள் கூறும் குறைகளை உங்கள் காதில் வாங்காமல் செயல்படுவீர். அரசு வழியில் ஒரு சிலருக்கு நெருக்கடி ஏற்படும்.வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த அளவிற்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்:
ஒரு முயற்சியை மேற்கொண்டு லாபம் காண்பீர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். அரசுவழி முயற்சி சாதகமாகும்.உங்கள் செயல்களில் மற்றவர் குறுக்கீடு இருந்தாலும் அவற்றை முறியடிப்பீர்.
மீனம்:
குடும்பத்தில் உண்டான பிரச்சனை விலகும்.பிள்ளைகளை பற்றி கவலை வளரும்.பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வரும்.வண்டி வாகனத்தில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |