இன்றைய ராசி பலன்(04.12.2024)

Report

மேஷம்

குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் அகலும்.நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.வியாபாரம் உங்களுக்கு நல்ல வருமானம் பெற்று தரும்.செயல்களில் நிதானம் அவசியம்.

ரிஷபம்

செய்யும் வேலையில் தடைகளை சந்திப்பீர்கள்.தேவை இல்லாத பிரச்சனை உங்களை தேடி வரும் ஆதலால் அமைதி காப்பது நல்லது.உங்கள் கனவுகளை போராடி ஜெயிப்பீர்கள்.

மிதுனம்

எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.மனதில் ஒருவிதமான பயமும் பதட்டமும் தோன்றும்.உங்கள் எதிரிகளை கண்டுகொள்வீர்கள்.அலுவலகத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும்.

கடகம்

நீங்கள் நினைத்தது நடந்தேறும். மனதில் தெளிவு பிறக்கும். எதிரி தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பமடையும். கவனமாக செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும்.நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர்.

கன்னி

வேலைக்காக அலைச்சல் அதிகரிக்கும்.மனதில் பாரம் உண்டாகும்.குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும்.

கலியுகம் குறித்து விஷ்ணு புராணம் சொல்வது என்ன?

கலியுகம் குறித்து விஷ்ணு புராணம் சொல்வது என்ன?

துலாம்

அலுவலகத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவீர்கள்.திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம்

வேலை பளு அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.

தனுசு

நிதானமாக செயல்படவேண்டும்.மனதில் தேவை இல்லாத குழப்பத்தால் சங்கடங்கள் தோன்றும்.கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் உருவாகலாம்.அமைதி காப்பது நல்லது.

மகரம்

பணிபுரியும் இடத்தில் பிரச்னை தேடிவரும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.

கும்பம்

புதிய நிலம் வாங்குவதை குறித்து ஆலோசனை செய்வீர்கள்.திட்டமிட்டு வேலைகளை செய்வதால் வெற்றி உண்டாகும்.புதிய நட்பின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்

சுற்றம் அறிந்து செயல்படுவீர்கள்.உங்களை பற்றி பிறர் புரிந்து கொள்வார்கள்.இறைநாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வடிக்கையாளர்களால் வருமானம் உயரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US