2025-ல் சனி அருளால் அமோகமாக வாழப்போகும் 9 நட்சத்திரங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் நவ கிரகங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதியாக திகழ்கின்றன. அவற்றுடன் இந்த ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன.
அந்த வகையில், சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி சனி பகவான் தன்னுடைய சொந்த ராசியான கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
இது பல ராசிகளுக்கு பாதகமாக இருப்பினும் சில நட்சத்திரங்களுக்கு யோகமாக அமைய இருக்கிறார்.அப்படியாக அந்த அதிர்ஷ்டம் பெற போகும் நட்சத்திரங்கள் பற்றி போகும்.
துலாம் (ஸ்வாதி, விசாகம், சித்திரை):
சனியின் இந்த இடப்பெயர்ச்சியானது மூன்று நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும்.அவர்கள் மனதில் உள்ள ஆசை விலகும்.பொருளாதார முன்னேற்றம் சிறப்பாகும்.இவ்வளவு நாள் ஏற்பட்ட அவமானங்கள் விலகி நன்மைகள் பெறுவீர்கள்.
ரிஷபம் (ரோகிணி, மிருகசீரிஷம், கிருத்திகை):
ரிஷப ராசியினரின் பதினோராவது வீட்டில் சனி அமைய இருப்பதால் எல்லாம் சாதகமாக அமையும்.உங்களை நம்பி நீங்கள் தொழிலில் பண முதலீடுகளை போடலாம்.சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டவர்கள் அந்த தோஷத்தில் இருந்து விலகுவார்கள்.இனிமேல் எந்த வித பாதிப்பும் இருக்காது.
மகரம்(அவிட்டம், திருவோணம், உத்திராடம்):
மகர ராசியினரின் மூன்றாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் இந்த மூன்று நட்சத்திரங்களும் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள்.அவர்கள் தேர்ந்து எடுக்கும் துறையில் அவர்கள் மிக பெரிய வெற்றி அடைவார்கள்.நீங்கள் கேட்ட உதவி உங்களுக்கு கேட்ட நேரத்தில் கிடைக்கும்.மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |