தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
பொதுவாக நம் வீட்டில் தினமும் தவறாமல் விளக்கேற்றும் பொழுது நம் முகம் பொலிவடைவதை பார்க்கமுடியும்.
அதோடு சேர்ந்து நம் வீடும் பிரகாசம் அடைவதை பார்க்கமுடியும். இதனால் தான் பல அரசர்கள் தீபம் ஏற்றுவதை மிக சிறந்த திருப்பணிகளாக செய்து வந்தனர்.
நாம் தீபம் ஏற்றும் பொழுதும் மனதில் கண்டிப்பாக ஏதேனும் நினைத்து ஏற்றுவது உண்டு, அப்படியாக நாம் ஒவ்வொரு முறையும் தீபம் ஏற்றும் பொழுதும் இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்
கீடா: பதங்கா மசகாச் வ்ருக்
ஷ ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா
இதனுடைய பொருள் என்னவென்றால் புழு பறவைகள் மனிதர்கள் என அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தீபத்தின் ஒளி சமமே.
ஒரு தீபத்தின் ஒளி எப்படி பாரபட்சம் இன்றி எல்லாரிடத்திலும் ஒரே மாதிரி விழுகிறதோ மனிதர்கள் நாமும் எல்லார் இடத்திலும் ஒரே போல் அன்பு காண்பிக்க வேண்டும்.
அனைவரும் சமம் என்று உணர்ந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பதாகும்.