தீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும்

By Sakthi Raj May 23, 2024 11:00 AM GMT
Report

கிழக்கு:

இத்திசை நோக்கி, தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாக்குவார்கள்.

தென்கிழக்கு:

இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர்.இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

தீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும் | Deepam Palangal Parigaram Thisaigal Kilaku Merkku

தெற்கு:

வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. மரண பயம் உண்டாக்கும்.வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத்தரலாம்.

தெற்மேற்கு

இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

மேற்கு:

இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

வடமேற்கு:

இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்ப சண்டைகள் நீங்கும்.

தீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும் | Deepam Palangal Parigaram Thisaigal Kilaku Merkku

வடக்கு:

இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

வடகிழக்கு:

இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர் தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US