இன்று மறக்காமல் வீட்டில் மஹாபரணி எம தீபம் ஏற்றுங்கள்
மஹாபரணி என்பது மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது எமதர்மராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்களின் கர்மவினைக்கு ஏற்ப, எமதர்ம ராஜா அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது ஐதீகம்.
நீதிமான் ஆன எமதர்மராஜா உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்வது மற்றும் எம தீபம் ஏற்றுவது போன்றவைகளை செய்தால் எமதர்மன் மனம் மகிழ்ந்து நம்முடைய முன்னோர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார் என்பது நம்பிக்கை.
எம தீபம்
ஒருவருக்கு வாழ்நாளில கண்டிப்பாக இறப்பின் மீது ஒரு வகை பயம் வந்திருக்கும்.அப்படியானவர்களுக்கு மரணபயம் நீங்கவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் எமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மகாளய பட்சம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு இக்காலத்தில் வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 'எம தீபம்' மட்டுமே.
எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். முடியாதவர்கள் சுவாமிக்கு விளக்கேற்றும் போது, தனியே ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை.
எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.அதாவது அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இந்த எம தீபம் உதவியாக இருப்பதாக கருத்து.
மேலும்,நம் வீட்டில் எம தீபம் ஏற்றினால் வீட்டில் உண்டான தடைகள் துன்பங்கள் விலகும்.குடும்பம் மேன்மை அடையும்.
எம தீபத்தை மகாளய பட்சத்தில் வரும் மஹாபரணி நாளிலும், தீபாவளி காலத்தில் வரும் திரயோதசி திதியிலும் ஏற்ற வேண்டும். இவ்வாறு எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது வருடம் முழுவதும் நல்ல பலன்களை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |