தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும்
எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் அவர்களுக்கு முன்னோர்களும் ஜோதிடர்களும் கூறும் அறிவுரை கோயிலில் சென்று தீபம் போடுங்கள் என்று.உண்மையில் தீபம் போட நம்முடைய பாவம் குறையும். நமக்கு வரும் துன்பமானது இருள் போன்றது.
அந்த இருளை போக்க ஔி என்பது மிக அவசியம்.அப்படியாக அந்த ஒளியான தீபம் நம்முடைய பாவத்தை துன்பத்தை நீக்குவதாகும்.
இருள் அகற்றி மனிதனின் மனதிழுலும் சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி பாவம் என்னும் இருளையும் அகற்றி சோதனை கஷ்டங்கள் வேதனை என்ற இருளையும் அகற்றி ஔி வளரட்டும் ஔி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும்.
இருந்தாலும் நாம் தீபம் ஏற்றுகின்ற சூழல் அதோல் பயன் படுத்தும் சுத்தமான நெய் இவை எல்லாம் கொண்டு தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய மனமும் சுத்தமாகி இறைவனின் பரிபூர்ண அருளை பெரும்.மேலும் பலருக்கு கோயில்களில் எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும் என்று குழப்பம் வரும்.
அதாவது நாம் கோவில்களில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பூர்வீக தோஷம் குறையும் என்பது ஐதீகம்.
இது அடிப்படை. மேலும் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும் போது பஞ்சாட்சரம் ஓதித்தான் அதை கையில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |