பங்குனி உத்திரம்: 3 தலைமுறையாக முருகப்பெருமானுக்கு வேல் கொடுக்கும் பக்தர்

By Sakthi Raj Mar 31, 2026 07:09 AM GMT
Report

 பங்குனி உத்திரம் என்பது மிகவும் விசேஷமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் குலதெய்வ வழிபாடுகளில் இருந்து முருகப்பெருமான் சிவன் பார்வதி ராமர் சீதை என்று எல்லா தெய்வங்களையும் வழிபட்டு அவர்களுடைய அருள் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். 

அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் ஒன்றாம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் காப்பு கட்டிய பக்தர்கள் காவடி எடுத்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

பங்குனி உத்திரம்: 3 தலைமுறையாக முருகப்பெருமானுக்கு வேல் கொடுக்கும் பக்தர் | Devotee Gives Free Vel For 3Decades In Rameshwaram

நேற்று நடந்த கேது பெயர்ச்சி.., கண்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்.

நேற்று நடந்த கேது பெயர்ச்சி.., கண்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்.

அதே போல் ராமேஸ்வரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதி பங்குனி உத்திரம் அன்று அலகு குத்தி, பால் காவடி, பறவை காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, போன்ற பல காவடிகள் எடுத்து ராமநாத சுவாமி கோவிலின் மேற்கு கோபுர வாசலில் அமைந்திருக்க கூடிய முருகப்பெருமானுக்கு நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள மார்க்கெட் தெரு பகுதிகள் வெயில்களில் இருக்கும் வேல்களில் துரு நீக்கி அலகு குத்தும் பக்தர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாலிஷ் செய்து தயார் செய்யக்கூடிய பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

பங்குனி உத்திரம்: 3 தலைமுறையாக முருகப்பெருமானுக்கு வேல் கொடுக்கும் பக்தர் | Devotee Gives Free Vel For 3Decades In Rameshwaram

2026: நாளை பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

2026: நாளை பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

அந்த வகையில் ராமேஸ்வரத்தில் உப்பு காற்றினால் வேல் விரைவில் துருப்பிடித்து பயன்படுத்த முடியாமல் சென்று விடும் என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் வேல்கள் வைக்கப்படுகின்றன. திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த வேல் எடுத்து வந்து அதில் உள்ள இரும்புக்கரைகள் தூசி ஆகியவற்றை நீக்கி பாலிஷ் செய்யப்படுகிறது.

வேல் பாலிஷ் செய்யாவிட்டால் பக்தர்களுக்கு நோய் தொற்று வரக்கூடும். மேலும் தேர் காவடிகளுக்கு பெயிண்ட் அடித்து அலங்காரம் செய்த தயார் செய்யக்கூடிய பணிகளும் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த வேலைகளை மூன்று தலைமுறைகளாக பக்தர் குடும்பம் ஒருவர் பக்தர்களிடம் எந்த ஒரு பணமும் வாங்காமல் ஒரு சேவையாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US