வரப்போகும் தந்தேராஸ் நன்னாள்.., எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளை வாங்கவேண்டும்?
தந்தேராஸ் என்ற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வந்துள்ளது.
தன் என்றால் செல்வம் என்று பொருள். தேராஸ் என்றால் இந்து நாள்காட்டியின் படி 13ஆவது நாள்.
தீபங்களின் பண்டிகையான தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் அட்சய திருதியை கொண்டாடுவது போல வட இந்தியாவில் தந்தேராஸ் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
இந்த தந்தேராஸ் நாளில் தான் ஆயுர்வேதத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பிறந்தார்.
இந்நாளில் தன்வந்திரியை வணங்குவதோடு, தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கினால், அது பெருகும் என்பது ஐதீகம்.
அந்தவகையில், தந்தேராஸ் நன்னாளில் எந்த ராசிக்காரர்கள் எதை வாங்கலாம் என்று பார்க்கலாம்.
- மேஷம்- வெள்ளி அல்லது பித்தளை வாங்கலாம்.
- ரிஷபம்- தங்கம் அல்லது புதிய வாகனம் வாங்கலாம்.
- மிதுனம்- வெண்கல பாத்திரம் அல்லது மரகத ரத்தின கல் வாங்கலாம்.
- கடகம்- லட்சுமி அல்லது விநாயகர் சிலைகளை வாங்கலாம்.
- சிம்மம்- தங்கம் அல்லது ரூபி உலோகத்தை வாங்கி அணியலாம்.
- கன்னி- வெண்கல பாத்திரங்கள் வாங்கலாம்.
- துலாம்- வெள்ளியால் ஆன லட்சுமி கணேச சிலைகள் வாங்கலாம்.
- விருச்சிகம்- செம்பு அல்லது வெண்கலம் வாங்கலாம்.
- தனுசு- தங்கம் அல்லது பித்தளை வாங்கலாம்.
- மகரம்- பித்தளை பாத்திரத்தை வாங்கலாம்.
- கும்பம்- வெள்ளி அல்லது செம்பு பாத்திரங்களை வாங்கலாம்.
- மீனம்- தங்கம், வெள்ளி நகைகள் அல்லது உலோக சாமி சிலைகளை வாங்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







