தீபாவளி: இந்த 1 பொருளை வாங்கினால் அதிர்ஷ்டம் தேடி வரும்
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை நாளில் எல்லோருமே புத்தாடைகள் அணிந்து பலகாரம் இனிப்புகள் செய்து உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து அந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
மேலும் தீபாவளி திருநாளில் மிக முக்கியமாக எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது ஒரு நிகழ்வாக காலை நடைபெறும். மேலும் இந்த தீபாவளி அன்று நாம் தேய்த்து குளிக்க கூடிய எண்ணெய் எந்த முறையில் தயார் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தீபாவளி முதல் நாள் இரவு நல்லெண்ணெய்யில் மிளகாய் மிளகு சீரகம் இஞ்சி, மஞ்சள் தட்டி போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு எண்ணெய் எல்லாம் தலை முதல் கால் வரை உடலெல்லாம் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு இந்த எண்ணெயில் சேர்த்து இருக்கக் கூடிய மிளகாய் வாயுவை அடக்கும், மிளகு சீரகம் ஜீரணத்திற்கு உதவும், பித்தத்தை குணப்படுத்தும், மஞ்சள் குளிர்ச்சியைத் தரும். அன்றைய தினம் நாம் கட்டாயம் சீகைக்காய் தேய்த்து குளிப்பது தான் நல்லபலன் அளிக்கும்.
இதனால் நம் உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி குளிர்ச்சி உண்டாகும். மேலேயும் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் காலை 5 மணி முதல் ஏழு மணி வரை நான் நேரத்திற்குள் குளித்து விட வேண்டும். மதியம் 12 மணிக்கு மேல் எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் அவர்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.
அதை போல் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் அன்று இரவு வரை தூங்காமல் இருப்பது நல்லது. எண்ணெய் தேய்த்து குளித்ததால் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் நிலை பாதிக்கும். மேலும் தீபாவளி என்று எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் நாம் கங்கா நீரல் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும்.
மேலும் நாம் தீபாவளி என்று பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வக் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அதாவது எண்ணெய் அதில் லட்சுமி தேவியும், சீகைக்காயில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும் புத்தாடையில் மகாவிஷ்ணும் இருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும் தீபாவளி அன்று வீடுகளில் அதிர்ஷ்டம் சேர உப்பு வாங்கினால் நமக்கு மிக சிறந்த பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். ஆதலால் கட்டாயம் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் கட்டாயம் நம் வீடுகளில் அதிர்ஷ்டம் தேடி வருமாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







