இன்று ஐப்பசி பௌர்ணமியில் மறந்தும் இந்த 3 தவறுகளை செய்யாதீர்கள்
ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிகவும் விசேஷமானது. அதிலும் ஐப்பசி பௌர்ணமி இன்னும் கூடுதல் விசேஷத்தை பெறுகிறது. அதாவது இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் தான் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
சிவபெருமானுக்கு தினமும் பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தாலும் வருடத்திற்கு ஒருமுறை ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படும் அன்னா அபிஷேகம் அனைத்து விசேஷங்களையும் விடவும் உயர்வானதாக கருதப்படுகிறது.
அதாவது அன்னா அபிஷேகத்தை நாம் ஒரு முறை தரிசனம் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த அந்தஅன்னம் பிரசாதமாக கிடைத்தாலே நமக்கு அன்னதோஷம் விலகி நம்முடைய தலைமுறையினர் அனைவரும் உணவிற்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள்.

ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவபெருமானை மட்டும் வழிபாடு செய்யாமல் சந்திர பகவானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் தான் சந்திர பகவான் தன்னுடைய 16 கலைகளுடன் முழு பிரகாசமாக காட்சி அளிப்பதாக ஐதீகம்.
ஆதலால் இந்த நாளில் நாம் சந்திர பகவானை தரிசனம் செய்கின்ற பொழுது நமக்கு மனரீதியாக எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் அவை விலகி நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னப்பிரசாதத்துடன் சேர்த்து பாகற்காயும் பிரசாதமாக கொடுப்பார்கள்.
சிவபெருமானுக்கு படைத்த அன்னத்துடன் பாகற்காயையும் நாம் சாப்பிடுவதால் உடல் பலம் பெற்று ஆரோக்கியம் கிடைக்கும். அப்படியாக இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் நாம் மறந்தும் ஒரு மூன்று விஷயங்களை மட்டும் செய்யக்கூடாது என்கிறார்கள். அவ்வாறு செய்யும் பொழுது நம் வீடுகளில் அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

ஐப்பசி பௌர்ணமி அன்று செய்யக்கூடாத மூன்று விஷயங்கள்:
1.ஐப்பசி பௌர்ணமி நாளில் மறந்தும் அரிசி, பால் அல்லது பால் தொடர்பான பொருட்களை கடனாக கொடுக்கவும் பிறரிடம் வாங்கவும் கட்டாயம் கூடாது. இதனால் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியின் கோபத்திற்கு நாம் ஆளாக நேரும்.
2. ஐப்பசி பௌர்ணமி நாளில் கட்டாயமாக நம் வீடுகளில் உணவுகளை உதாசீனப்படுத்துவதோ, வீணாக்குவதோ கூடாது. இவை நமக்கு தீராத அன்ன தோஷத்தையும் வறுமையையும் ஏற்படுத்தி விடும்.
3. ஐப்பசி பௌர்ணமி நாளில் கட்டாயமாக மாலை நேரத்தில் வீடுகளை இருட்டாக வைத்திருக்கக் கூடாது. எந்த பகுதிகளும் இருள் சூழ்ந்து இருப்பதை தவிர்த்து விட வேண்டும். இதனால் வீடுகளில் அன்னலட்சுமி தங்காமல் தீய சக்திகளும் வறுமையும் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |