பரிகாரம் பலிக்குமா? பலிக்காதா? இந்த 7 சகுனங்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம்
நாம் ஜாதகம் பார்க்கும் பொழுது நமக்கு ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அந்த தோஷத்தை போக்குவதற்காக ஜோதிடர்கள் சில பரிகாரங்கள் சொல்லுவார்கள். மேலும் இந்த பரிகாரங்களை சிலரும் ஒரு தயக்கத்தோடு செய்வது உண்டு. அதாவது நாம் செய்யக்கூடிய பரிகாரம் உண்மையில் பலன் அளிக்குமா? என்று அவர்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும்.
அப்படியாக நாம் செய்யக்கூடிய பரிகாரம் பலிக்குமா பலிக்காதா? என்று இந்த 7 சகுனங்களை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும். அதைப்பற்றி பார்ப்போம்.
பொதுவாக நாம் பரிகாரங்கள் செய்யும் பொழுது நம்மை சுற்றி நடக்கக்கூடிய சில சகுனங்களை நாம் மிக கவனமாக கவனிக்க வேண்டும். அவ்வாறு சில சகுனங்கள் நடக்கும் பொழுது நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நிச்சயம் பலிக்க கூடிய 100 சதவீத வாய்ப்புகள் இருக்கிறது.
1. அந்த வகையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது கோவில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிக்கும் சத்தம் நம் காதுகளில் கேட்டால் நாம் செய்யக்கூடிய பரிகாரம் நல்ல முறையில் முடிந்து நாம் வேண்டும் காரியம் நடக்கும்.
2. மேலும் பரிகாரம் முடித்து வரும் பொழுது கோயில் பிரசாதம் வழங்கப்படும் இடத்தை பார்த்தாலோ அல்லது நமக்கு கோயில் பிரசாதம் யாரேனும் கொடுத்தாலோ நாம் செய்த பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
3. பரிகாரம் செய்து முடித்த பிறகு தெய்வங்களுடைய மந்திரங்கள் அல்லது பாடல்கள் நம்முடைய காதுகளுக்கு கேட்டாலும் அவை நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.
4. நாம் பரிகாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது கோயில் அர்ச்சகர் வருவதை நாம் பார்த்தாலும் நம்முடைய பரிகாரம் நிச்சயம் நல்ல பலன் பெறும்.
5. பரிகாரம் முடித்த பிறகு யாரோ ஒருவர் குளித்து வருவதை கண்டாலும் நிச்சயம் நாம் செய்த பரிகாரம் பலிக்கும்.
6. பரிகாரம் செய்து முடித்த பிறகு தெய்வங்களுடைய படங்கள் அல்லது சிலைகள் நம் கண்களுக்கு தெரிந்தால் நம் செய்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலன் அளித்து வேண்டுதல் நிறைவேறும்.
7. பரிகார முடித்து வரும் பொழுது தெய்வங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தாலோ தெய்வங்களுடைய திருநாமங்கள் எங்கேயும் ஒலித்துக் கொண்டு இருந்தாலும் நாம் செய்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.
மேலும் இவ்வாறு சில சகுனங்கள் இருந்தால் மட்டுமே நாம் செய்த பரிகாரம் பலன் பெறும் என்று இல்லை இவ்வாறு சகுனங்கள் நம் செய்யும் பொழுது நடந்தால் விரைவில் அந்த பரிகாரம் நிறைவேறும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இல்லையென்றாலும் பரிகாரம் செய்யும் பொழுது நாம் மனதார செய்தால் இறைவனுடைய அருளால் அதற்கு கட்டாயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும். ஆதலால் என்ன ஒரு பரிகாரம் செய்தாலும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது நமக்கு இருக்க கூடிய தோஷங்கள் விலகி நம் வாழ்க்கை நலம் பெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







