இன்றைய ராசி பலன்(23-10-2025)

Report

மேஷம்:

மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். உணவு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. நன்மையான நாள்.

ரிஷபம்:

மனதில் தேவை இல்லாத பயமும் பதட்டமும் உண்டாகும். உங்களுடைய கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். எதிர்பாராத பரிசுகள் பெறுவீர்கள்.

மிதுனம்:

இன்று ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ள படுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்:

உங்கள் கணவன் வழி சொந்தங்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். தந்தை உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்:

இன்று சிலருக்கு வியாபாரத்தில் தேவை இல்லாத சிக்கல்களும் வம்பு வழக்குகளும் வர வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து சில விஷயங்களை முயற்சி செய்வதால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும்.

கன்னி:

உடல் ரீதியாக சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரி ஆகும். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும். நன்மையான நாள்.

பகவத் கீதை- ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பது எப்படி?

பகவத் கீதை- ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பது எப்படி?

துலாம்:

இன்று மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். தேவை இல்லாத குழப்பங்கள் மனதை விட்டு விலகும். ஒன்றுக்கும் மேற்பட்ட சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். நற்செய்தி தேடி வரும் நாள்.

விருச்சிகம்:

உங்களின் எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை செய்து கொள்வீர்கள். மதியம் மேல் நீங்கள் நினைத்த விஷயங்களில் சில தடைகளும் தாமதமும் வரலாம்.

தனுசு:

பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். வழக்கு விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மையான நாள்.

மகரம்:

நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நாள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். தெளிவான முடிவு எடுத்து வெற்றி பெரும் நாள்.

கும்பம்:

வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர்.

மீனம்:

இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US