மகா கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
முருகப்பெருமான் விரதங்களில் கந்த சஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும். முருக பக்தர்கள் பலரும் இந்த மகா கந்த சஷ்டி விரத நாளுக்காக காத்திருந்து அவர்கள் விரதம் இருந்து தங்களுடைய பிரார்த்தனையை முருகப்பெருமானிடம் வைப்பார்கள்.
மகா கந்த சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமான் அவர்கள் கேட்ட வரத்தை அருளி செய்கிறார்.
அப்படியாக விரதம் இருப்பவர்கள் தினமும் காலை மாலை போன்ற பூஜை வேளையில் அமர்ந்து முருகப்பெருமானுடைய மந்திரங்களையும் முருகப்பெருமானுடைய பாடல்களையும் பாடி அவரை மகிழ்வித்து அவருடைய அருளை பெற வேண்டும், அந்த வகையில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
மந்திரங்கள்:
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
மூல மந்திரம் :
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்க்லௌம் ஸௌம் நமஹ
ஒருவர் நினைத்ததை அடைய வேண்டுமென்றால் அவர்கள் கடும் தவம் செய்தால் கட்டாயம் இந்த பிரபஞ்சமானது அந்த தவத்திற்கான ஒரு விடையை கொடுக்கும்.
அவ்வாறு நாம் நினைத்தது நடக்கவும் நாம் எண்ணிய காரியம் விரைவில் கைகூடி வரவும் விரதம் இருக்கும் பொழுது முருகப்பெருமானின் மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது முருகப்பெருமானுடைய அருளால் கந்த சஷ்டி விரதம் முடித்து சிறிது நாட்களில் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறி நம்முடைய வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியாக மாறும்.
இந்த மந்திரங்களை எல்லாம் சித்தர்களும் ஞானிகளும் அவர்கள் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்காக தவமிருந்து சொல்லிய மந்திரங்கள் ஆகும். இந்த மந்திரத்தை முடிந்தவர்கள் முறை 108, 1008, 10008, 100008 என நம்மால் முடிந்த அளவிற்கு சொல்லி வழிபாடு செய்யும் பொழுது அனைத்து நன்மைகளும் நமக்கு நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







