சஷ்டி விரதம் இருப்பவர்கள் என்ன நெய்வேத்தியங்கள் படைத்து வழிபட வேண்டும்?
முருகப்பெருமான் விரதங்களில் சஷ்டி விரதம் என்பது அனைவராலும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான விரதமாகும். இந்த மகா கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஒரு சிலர் 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.
இந்த ஆறு நாட்களும் விரதம் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானுக்கு தவறாமல் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படியாக முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள் தினமும் என்ன நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம். அதாவது சர்க்கரை பொங்கல், கற்கண்டு பொங்கல், தேன் திணை மாவு, அவல் பழங்கள் பால் இளநீர் ஆகியவை நெய்வேத்தியங்களாக படைக்கலாம்.
இதோடு செவ்வாழை பழம், மாம்பழம், கொய்யாப்பழம் போன்ற பழங்களை ஒவ்வொரு நாளும் தினமும் நம் பூஜையின் பொழுது வைத்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யும் பொழுது முருக பெருமான் மனம் மகிழ்வார்.
அதோடு ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு நெய்வேத்தியம் முருகப் பெருமானுக்கு படைத்து அவருக்காக நாம் பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது நம் மனமும் குளிர்ந்து சந்தோஷம் அடைகிறது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







