ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னைக்கு ஆபத்து வருமா?
2026 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கிறது. அதாவது இந்த ஆண்டில்தான் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்ற முக்கியமான கிரக பெயர்ச்சி நடக்கிறது. அந்த வகையில், குரு பகவான் இந்த ஆண்டு அவரின் உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கம் உலகளாவிய மாற்றத்தை உண்டு செய்யும். அதாவது தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத அளவிற்கு எட்டி இருக்கிறது. அவை இந்த ஆண்டும் உயருமா அல்லது இறங்குமா என்ற குழப்பம் உள்ளது.
அந்த கையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொடவில்லை என்றாலும் பெரிய அளவில் இறக்கத்தையும் சந்திக்காது என்று ஜோதிட கணிப்பின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், குரு பெயர்ச்சி கடக ராசியில் இருப்பதால் நீர் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.
அதனால் சென்னை போன்ற பகுதிகளில் இருக்க கூடிய மக்கள் டிசம்பர் மாதங்களில் மிகவும் கவனமாக பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியாக, 2026 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி எந்த அளவிற்கு நன்மை தீமை வழங்கி இருக்கிறது என்பதை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |