லக்னத்தில் கேது இருந்தால் நற்பலன்களை வழங்குமா?
ஜோதிடத்தில் 12 கட்டத்தில் 9 கிரகங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதில் நிழல் கிரகமான ராகு கேது எந்த கிரகங்களோடு இணையப்பெற்று இருக்கிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை சூழ்நிலையே மாறுபடும்.
அப்படியாக, ஜாதகத்தில் மிக முக்கியமான லக்னத்தில் கேது அமைந்து இருந்தால் அந்த ஜாதகர் என்ன பலன்களை பெறுகிறார், மேலும் அவர்களின் குணாதிசியங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
ஒருவர் ஜனன லக்னத்தில் ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் அமைய பெற்று இருந்தால், அந்த ஜாதகர் எல்லா விஷயங்களிலும் மிகுந்த குழப்பத்தோடு காணப்படுவார். இருந்தாலும் ஒரு விஷயத்தை பல முறை ஆலோசனை செய்து, ஆராய்ந்து தெளிவாக முடிவு எடுப்பார்கள்.
இந்த ஜாதகர் எப்பொழுதும் ஏதேனும் ஒரு விஷயங்களை பற்றி யோசித்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு எந்த ஒரு விஷயங்களிலும் விரக்தி உண்டாகும். அதோடு இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.
எப்பொழுதும் மனதில் இறை சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இவர்கள் முகம் தெய்வீக ஆற்றல் நிறைந்ததாகவும், நல்ல முகராசிக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் அமைதியான சூழ்நிலையை விரும்புவார்கள்.
தனிமை விரும்பியாக காணப்படுவார்கள். இந்த ஜாதகர் அவர்களை அறியாமல் சித்தர் வழிபாடுகளில் நாட்டம் கொள்வார்கள். இவர்களுக்கு வசியம் மற்றும் மாந்த்ரீகம் போன்றவற்றில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கும்.
தொழில் என்று வரும்பொழுது ஜாதகர் நல்ல கெளரவ பதவிகள் பெறுவார்கள். அதோடு, இவர்கள் பணத்தின் அருமை புரிந்து மிகவும் சிக்கனமாக செலவு செய்வார்கள். ஜாதகருக்கு தாய் வழி பாட்டியிடம் பாசம் அதிகம் இருக்கும்.
இருப்பினும் ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஜாதகர் வேதாந்தம், சித்தாந்தம் பேசும் நபராக இருப்பார்கள். இவர்கள் தனக்கென்று ஒரு வட்டம் வரைந்து அதில் வாழ முயல்பவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |