கோவிலில் செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டம் தேடி வருமா?
நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது முதல் வேளையாக நம்முடைய காலணிகளை கழற்றிவிட்டு செல்வோம். இது வழக்கமான நடைமுறை மற்றும் மரியாதை என்பதை கடந்து ஆன்மீக மரபின் ஒரு பகுதியாகவும் பயன்படுகிறது.
அப்படியாக சில நேரங்களில் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கின்ற நேரத்தில் வெளியே கழட்டி வைக்கக்கூடிய செருப்பு சமயங்களில் தொலைந்து போவதை நாம் பார்க்க முடியும். அந்த வகையில், நாம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து முடித்து திரும்பும் பொழுது நம்முடைய செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்.

அதாவது ஜோதிட ரீதியாக ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கிறது என்றால் அவர்கள் கோவிலுக்கு சென்று அவர்களுடைய செருப்பு தொலைக்கும் பொழுது சனியால்ஏற்படக்கூடிய தாக்கம் விலகும் என்று சொல்லப்படுகிறது.
அதைப்போல் அவர்களுடைய கர்ம பலனும், கடன் சுமை நீங்கி வாழ்க்கையில் ஒரு புதிய முன்னேற்ற பாதை பிறக்கக் கூடும் என்பதை சொல்கிறார்கள்.

அதனால் கோவிலுக்கு சென்று கூட்ட நெரிசலில் உங்களுடைய செருப்புகளை தொலைக்க நேர்ந்தால் கட்டாயமாக மனவருத்தம் அடையாமல் வாழ்க்கையின் புதிய தொடக்கமாகவும், புதிய பாதை பிறக்கப் போகிறது என்ற நம்பிக்கையை மனதில் வைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் சில விஷயங்களை தொலைப்பதாலும் நன்மைகளும் நடக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |