இறந்த பெற்றோர்கள் கனவில் வரலாமா?சாஸ்திரங்கள் சொல்வது என்ன?
உலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் கண்டிப்பாக இறப்பை ஒருநாள் சந்திக்க வேண்டும்.அப்படியாக கால சூழ்நிலையில்,விதி வரும் பொழுது நமக்கு நெருங்கியவர்களை நாம் இழக்க நேரிடலாம்.
அவ்வாறு அவர்கள் நம்மை விட்டு பிரியும் பொழுது,அந்த காயங்கள் நம்மை விட்டு எப்பொழுதும் மறையாது.இருந்தாலும் நெருங்கியவர்கள் இறந்து போனாலும் சமயங்களில் நம் கனவில் வருவதுண்டு.
அவ்வாறு நெருங்கிய உறவுகள் மற்றும் நம்மை பெற்று எடுத்த தாய் தந்தை இறந்து அவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
நம் வாழ்க்கையில் கனவு வ்ருவது என்பது இயல்பு.மேலும் நம் சாஸ்திரங்களில் வரும் கனவுகளுக்கு ஒவ்வொரு பலன் உண்டு.அப்படியாக நம் வீட்டில் உள்ள சொந்தங்கள் இறந்து,அவர்கள் நம் கனவில் வந்து பேசுவது போல் கண்டால் பேரும், புகழும் கிடைக்க போகிறது எண்டு அர்த்தம்.
அதே போல் இறந்து போன உறவினர்கள் நம் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் நற்பெயரும் செல்வ செழிப்பும் ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும். மேலும்,இறந்தவர்கள் நம் வீட்டிற்கு வந்து நம்முடன் அமர்ந்து பேசுவது போல் கனவு கண்டால் நம்முடைய நெருக்கடிகள் விரைவில் முடியும் என்று அர்த்தமாகும்.
அதே போல் இறந்து போன தாய் தந்தை இருவரும் நம் கனவில் வந்தால் நமக்கு வரவிருக்கும் ஆபத்தை அவர்கள் எச்சரிக்கை கொடுக்க வந்ததாக அர்த்தம்.இறந்து போன உங்கள் அப்பா உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.
அதேபோல, இறந்து போன உங்கள் அம்மா, கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
அதே சமயம்,இறந்து போனவர்கள் நம் வீட்டிற்கு வந்து தூங்குவது போல் கனவு கண்டால் நம் வீட்டில் ஏற்பட்ட கண்டம் விலக போகிறது என்று அர்த்தம்.அதேபோல இறந்தவர்கள் நம்முடைய கனவில் வந்து அழுதால், அது நல்லதில்லை என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |