2025 மார்ச் 29 சனி பெயர்ச்சி இருக்கிறதா? இல்லையா?
ஜோதிடத்தில் 2025ஆம் ஆண்டு அனைவரும் சனி பெயர்ச்சிக்காக காத்திருக்கின்றனர். அதாவது இந்த சனி பெயர்ச்சியில் இருந்து பலருக்கும் பல விதமான மாற்றங்கள் நடைபெறும் என்று காத்திருந்த வேளையில் திடீர் என மற்றொரு தரப்பில் சனிப்பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி இல்லை, இது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலரும் பல்வேறு வகையான குழப்பத்திற்கு ஆளாகினர். இதனால் காரைக்கால் மாவட்டம் சார்பாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி தேதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 2025ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி குறித்து பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி குறித்து பல்வேறு கணிப்புகள் கட்டுரைகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை அவர்கள் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என சொல்கிறார்கள்.
அதனால், 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
மேலும், திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |