ஜோதிடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை தோஷமா? அதிர்ஷ்டமா?
ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக செவ்வாய் மற்றும் சனி பகவான் இருக்கிறார். அதாவது வலிமை மற்றும் கோபத்திற்கு காரணியாக இருக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். உழைப்பு மற்றும் கர்ம வினைக்கு காரணமாக இருப்பவர் சனி பகவான். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பொழுது அல்லது செவ்வாய் சனி பார்த்தாலும் அது தோஷம் என்று பலரும் சொல்வதுண்டு.
காரணம் இந்த சேர்க்கை மனப்போராட்டங்களையும் தூக்கமின்மையையும் திருமண வாழ்க்கையில் தடையும் கொடுக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியாக ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை என்பது தோஷத்தை கொடுக்குமா அல்லது அதிர்ஷ்டத்தை கொடுக்குமா என்று பார்ப்போம்.

செவ்வாய் சனி சேர்க்கை இருப்பவர்கள் பொதுவாக வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை கடந்து இருப்பார்கள். ஆதலால் இவர்களுக்கு வாழ்க்கையின் பற்றிய புரிதலும் பக்குவமும் நிறைய கிடைத்திருக்கும். சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து சில அடிகளை சந்தித்து வருவதால் இவர்கள் ஜோதிடத்தில் ஆர்வம் கொள்கிறார்கள்.
அதனால் வாழ்க்கையில் எதனால் பிரச்சனைகள் நடக்கிறது என்று ஜோதிட ரீதியாக சில ஆராய்ச்சி செய்து ஒரு காலகட்டங்களில் இவர்கள் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் வருகிறார்கள். அதேபோல் இந்த செவ்வாய் சனி சேர்க்கை பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய தலைமைப் பொறுப்பை வகிக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தை இவர்கள் பெறுகிறார்கள்.

இந்த செவ்வாய் சனி சேர்க்கை கொண்டிருப்பவர்கள் வம்பு, வழக்கு, துரோகம் அறுவை சிகிச்சை, விபத்து போன்றவற்றில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட அவமானங்களை கஷ்டங்களை சந்தித்தவர்கள் அந்த கஷ்டத்திற்கு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வந்தர் ஆகக்கூடிய யோகத்தையும் இந்த செவ்வாய் சனி தான் கொடுக்கிறது.
ஆக செவ்வாய் சனி என்பது ஒருவருக்கு கஷ்டத்தை கொடுத்து ஒன்றை எடுத்துக்கொண்டு அதைவிட மிகப்பெரிய ஒரு பொக்கிஷத்தை அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அமைப்பு இருப்பதால் இந்த செவ்வாய் சனி என்பது எப்பொழுதும் தோஷம் , கஷ்டம் தான் கொடுக்கும் என்று நாம் எடுத்து விடக்கூடாது அது பல நேரங்களில் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |