வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் வாஸ்து பாதிப்புகள் உண்டாகுமா?
வாஸ்து அமைப்பிற்கு இவர்கள் இந்த வீட்டினுடைய சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு இருக்கிறார்கள் என்று வேறுபாடுகள் தெரியாது. வாஸ்து அதனுடைய வேலையை யார் இருந்தாலும் இல்லை என்றாலும் செய்து கொண்டே இருக்கும். ஆக, இங்கு எல்லோருக்கும் சொந்த வீட்டில் வசிக்கக்கூடிய அமைப்பு கிடைப்பதில்லை.
அப்படியானவர்கள் வாடகை வீட்டிற்கு செல்லக்கூடிய நிலைமை வருகிறது. இங்கு வாடகை வீடு கிடைப்பதே பெரும் கஷ்டமாக இருக்கின்ற சமயத்தில் நாம் வாஸ்துவும் சரியாக இருக்கக்கூடிய வாடகை வீட்டைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் நாம் நிறைய சங்கடங்களை சந்திக்ககூடும்.
அந்த வகையில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் வாஸ்து ரீதியாக வரக்கூடிய பாதிப்புகள் வருமா? வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்து தொடர்பான பிரச்சனை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் கட்டாயம் அவர்களுக்கு இருக்கும் இடத்தில் வாஸ்து சரி இல்லை என்றால் நிச்சயம் அதற்கான பலனை அவை கொடுத்து விடும். அப்படியாக வாடகை வீட்டில் இருக்கக்கூடியவர்கள் தினமும் தவறாமல் வீடுகளில் விளக்கேற்றியும் வீட்டை முடிந்த அளவிற்கு வாடகை வீடு என்று பாராமல் சுத்தமாக வைத்தும் சாம்பிராணி தூபம் போட்டும் வந்தால் நிச்சயம் பாதிப்புகள் குறையும்.
அதுமட்டுமல்லாமல் உங்களுடைய வீட்டின் ஹால் பகுதியில் தினமும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சில பூக்களை போட்டு வைத்து வந்தாலும் நிச்சயம் அந்த தண்ணீரானது வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை தாக்கத்தை எடுத்து விடும்.

மேலும், உங்கள் வீடுகளில் கண்ணாடியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் வீடுகளில் மந்திரங்களை பாராயணம் செய்வதும், மந்திரங்களை ஒலிக்க செய்வதும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஆக, வாஸ்து சரியில்லாத இடத்தில் அமரக்கூடிய நிலை வந்தாலும் நம்முடைய மனமும் நம்முடைய இறை பக்தியும் சரியாக இருக்கின்ற சமயத்தில் நமக்கு தீங்கு நடக்க வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தாலும் நம்மை நிச்சயம் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய ஒரு அமைப்பு உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |