என்ன தானம் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

By Yashini Dec 16, 2024 07:26 AM GMT
Report

ஒருவர் தனது வாழ்வில் ஒரு முறையாவது தான தர்மம் வழங்கவேண்டும் என்று சொல்வார்கள்.

தானம் என்பது பிறருக்கு தேவையானவற்றை அறிந்து அவர்களுக்கு தருவது ஆகும்.

ஒருவர் பசியால் வாடும்போது தனது பசியைக் கூறி உதவி கேட்க, அவர்களுக்கு உணவு கொடுப்பது தானமாகும்.

அந்தவகையில், என்ன பொருட்களை தானம் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

என்ன தானம் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? | Donation And Its Benefits In Tamil

தானமும் அவற்றின் பலன்களும் 

மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.

ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும், கடன்கள் குறையும்.

காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும், குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும், தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும். 

குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும், குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும், சுகம் தரும் இனிய குரல் வரும்.

நெய் தானம் – வீடுபேறு அடையலாம்.

தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

கம்பளி தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி.

பால் தானம் – சவுபாக்கியம் கிடைக்கும்.

பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி

தயிர் சாதம் – ஆயுள் நீடிக்கும், ஆரோக்கியம் நிலைக்கும்.

வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.

தங்கம் தானம்  – கோடிபுண்ணியம் உண்டாகும்.

பூமி தானம் – இகபரசுகங்கள்

துணி தானம் – சகல ரோக நிவர்த்தி

கோ தானம் – பித்ருசாப நிவர்த்தி, இல்லத்தின் தோஷங்கள் விலகும், பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.  

எள்ளு தானம் – பாப விமோசனம்

வெல்லம் தானம் – குல அபிவிருத்தி, துக்கநிவர்த்தி

சந்தனக்கட்டை தானம் – புகழ்.

விதை தானம் – வம்ச விருத்தியை தரும்.

மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும், தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும். 

பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும், கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும், அமைதியான மரணம் ஏற்படும். 

தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US