இனி இந்த தவறை ஒரு பொழுதும் செய்யாதீர்கள்
மனிதன் அவன் மாற்றி கொள்ள வேண்டும் என்ற குணங்களில் மிக முக்கியமான ஒன்று அவனின் அவசர புத்தி.இந்த அவசர புத்தி அவனை பல நேரங்களில் அவனுக்கு நடக்கும் நல்ல விஷயங்களை தடுத்து விடும்.பிறகு அதை பற்றி மனம் வருந்தி கொண்டு இருப்பார்கள்.
அப்படியாக நாம் எதையும் சரியாக ஆராயாமல் சிந்தித்த ஒன்று தவறாக முடிந்ததற்கான ஒரு சிறிய கதை ஒன்றை பற்றி பார்ப்போம்.
ஒரு அழகான சிறுமியிடம் அவளின் பாட்டி இரண்டு ஆப்பிள் கொடுத்தார்.அதை பார்த்து கொண்டு இருந்த சிறுமியின் தாய் அவளின்அருகில் என்ன?உன் கையில் இரண்டு ஆப்பிள் உள்ளது.
]
வா அம்மாவிற்கும் ஒரு ஆப்பிள் கொடு என்று கேட்கிறாள்.அதற்கு அந்த சிறுமி மிக வேகமாக ஒரு ஆப்பிளை கடிக்கிறாள்,பிறகு அடுத்த ஆப்பிளை கடிக்கிறாள் இதை பார்த்து கொண்டு இருந்த சிறுமியின் தாய்க்கு ஒரே ஏமாற்றம்.என்ன!இவள் இப்படி செய்கின்றாள் என்று.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சிறுமி தாயிடம் அம்மா இதோ இந்த ஆப்பிளை சாப்பிடுங்கள்.இந்த இரண்டு ஆப்பிளில் இந்த ஆப்பிள்தான் மிகவும் சுவையாக உள்ளது என்று சொல்ல,அந்த தாய் உறைந்து போனால்.ஆக நாம் எந்த சூழ்நிலையிலும் யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது.
என்னதான் நாம் ஒருவரை சில சூழ்நிலைகளை சரியாக கணிப்பவராக இருந்தாலும் சமயங்களில் அவை தவறாக முடியும்.இங்கே ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆச்சிரியமும் நல்ல குணங்களும் உள்ளது.அதை நாம் பொறுமையாக கவனித்தால் மட்டுமே நன்மை பெற முடியும்.அவர்களையும் நாம் தப்பாக இடைபோடாமல் புரிந்து கொள்ளமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |